உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

91

பேசுவது இத்தகையோர் சார்பிலேதான். எனவே சமதர்மம் தேசிய இயக்கத்தில் ஈடுபட வேண்டியது மட்டுமன்று; எந்த உரிமைப்படி பார்த்தாலும் அதில் தலைமை தாங்கும் நிலையே உடையது. இந்தியாவில் இயக்கத் தலைமை பெரும்பாலும் இன்ப வகுப்பினர் கையிலேயே - எப்படியும், இன்ப வகுப்பினர் ஆதரவை எதிர்பார்ப்பவர் கையிலேயே - இருப்பதைக் காண, இதன் அவசியம் இன்னும் மிகமிக முக்கியமானதாகும். முற்காலப் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் போராட்டத்தில் முதல்முதல் சலிப்படைந்தது இவ்வின்பவகுப்பே. பிரிட்டிஷ் ஆட்சியுடன் சமரசத்துக்கு முன்வந்ததும் இந்த வகுப்பே. ஆகவேதான் சமதர்மம் தேசியத்தின் ஒரு உறுப்பாக மட்டுமன்றி இந்திய மக்களியக்கத்தின் முதுகெலும்பாகவே கருதத்தக்கது.

அறிவுத் துறைச் சார்பில் இந்தியாவில் சமதர்மம் அவசியம் என்பதற்கான இன்னொரு காரணம் உண்டு. முற்றிலும் இன்ப வகுப்பினராலான நம் தேசியத் தலைவர் குழு விடுதலை பற்றித் தெளிவற்ற கருத்தே கொண்டுள்ளது என்பதை நம் தேசிய இயக்க வரலாறு முழுவதுமே காட்டுகிறது. தாம் என்ன செய்து முடிக்க எண்ணுகிறோம் என்பது பற்றிய தெளிந்த முடிவை நம் தலைவர்கள் என்றுமே நன்கு உணர்ந்து கொண்டதில்லை. இம் மனநிலை மிகவும் இடையூறு வாய்ந்ததாகும். அவர்கள் விரும்பியதெல்லாம் 'இந்தியாவை விட்டு வெளியேறு' என்ற கனவை நனவாக்குவதுமட்டுமே. இப்போதோ அது நனவாய் விட்டதென்று அவர்களே கூறுகின்றனர். கடைசி பிரிட்டிஷ் காரன் இவ்விடம் விட்டகன்றதுமே இந்தியா முழு விடுதலை பெற்றுவிடும் என்று கூறுவது நகைப்பிற்குரிய கூற்றாகும். இதனை இப்போது நாம் அனைவரும் உணர்ந்து கொண்டு விட்டோம். அத்துடன் கடைசி ஆங்கிலேயன் போவது என்பதும் முடியாத ஒரு காரியம். விடுதலை என்பது நாட்டில் வெளிநாட்டார் இல்லாம லிருப்பதென்பதன்று. அமெரிக்காவில் ஆங்கிலேயர் இருக்கின்றனர். அதனால் அமெரிக்கா விடுதலை யில்லாத நாடாய் விடவில்லை. அரசியல் பணிமனைகள் எல்லாவற்றிலும் முழுவதும் இந்தியரே அமர்ந்து விட்டால் அப்போது அதுவும் விடுதலையாய் விடமாட்டாது.பிரிட்டிஷ் ஆட்சியின்போது கூட இந்திய ஆட்சி நிலையங்களில் 100-க்கு 90 பங்கு இந்தியர் கையில்தான் இருந்தது. இதனால் இந்தியா 100-க்கு 90 பங்கு