உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

|---

அப்பாத்துரையம் - 46

மிக மோசமாகவே யிருப்பதால் வெளிநாட்டார் உதவி யில்லாமல் ஒரு போரின் தாக்குக்கு நாம் நிற்க முடியாது. மேலும் இப்படைத்துறையின் ஆட்கள், படை தாங்கியவரும் ஆட்சிப் பொறுப்பேற்றவர்களும் பிரிட்டிஷாராலேயே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்; தம்மை உயர்த்தியவர்கள் யாரென்பதை அவர்கள் எப்போதும் நினைவில் கொண்டவர்களாகவே இருப்பர்.

வினா (61):வேறு வகையில் கூறுவதானால், இவ்வதிகார மாற்றம் கானல்நீர் போன்ற ஒரு போலித்தோற்றம் என்பது தானே உங்கள் கருத்து?

விடை : கொள்கையளவில் ஏற்பட்டதே அம்மாற்றம். செயலளவில் அது உண்மையான மாற்றம்தானா என்பதை அதன் போக்குதான் தெளிவுபடுத்த வேண்டும். ஏகாதிபத்தியம் தானாக நேரடியாக ஆள்வதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைமுக ஆட்சி என்ற கலைத்துறையை அது நன்கு பயிற்சி செய்து முழுநிறை கலைநுட்ப மாக்கியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பெயரளவில் விடுதலையுடைய பல அரசியல்கள் உள்ளன.

கு

ஆனால் உண்மையில் அவையனைத்தும் வல்லரசுகள்

ஏதாவதொன்றன் கைப்பிடியிலேயே உள்ளன. படைத்துறை, நிதித்துறை உதவிகட்கு இவ்வரசியல்கள் ஏதாவதொரு வல்லரசின் உதவியைச் சார்ந்தே நிலைபெறுகின்றன. இந்நிலையில் அவை தனிப்பட்ட முயற்சி எதுவும் தாமாகச் செய்யமுடியாது. இத்தகைய அரசியல்கள் கையாள் அரசியல்கள் (client states) எனப்படும்.

வினா (61): இந்தியா பிரிட்டனின் கையாள் அரசியலா?

விடை: ஆம், குடியேற்றநாட்டுப் பிணைப்பிலிருந்து நீங்கித் தனி ஆதீன சுதந்தர அரசு என அறிவிக்கப்பட்டால்கூட அது அந்நிலையுடையதே.

வினா (62) இது பற்றிப் பல்வேறு வகுப்புக்களின் தனித்தனி நோக்குகள் யாவை?

விடை: இத்தறுவாயில் இவை யனைத்தும் குழப்பமடைந் துள்ளன. எதிர் காலத்தில் தம் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை யாரும் உணரவில்லை. புதிய சூழ்நிலைகள்பற்றி அவை அச்ச