உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

103

அச்சடிப்பவர்களாகவும் கம்பளம், கம்பளி ஆடை நெய்பவர் களாகவும் மரவேலை செய்பவர்களாகவும் மற்றும் இதுபோன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டவர்களாகவுமே யுள்ளனர். இவர்களையும் மற்றெல்லாரையும் சேர்த்து மொத்தம் தொழிலாளர்கள் மக்கள் தொகையில் 100-க்கு 10 விழுக்காட்டுக்கு மேலில்லையாயினும் அவர்கள் வறுமைநிலை சொல்லித் தொலையாது. அவர்கள் உடனடியாக உதவி பெறவேண்டிய நிலையில் உள்ளனர். இவ்வகுப்பை நலிவித்துக்கொண்டே யிருக்கும் சக்திகள் பிற்போக்குத் தன்மை, கல்வியில்லாமை, அமைப்பு ஒற்றுமையின்மை ஆகியவையே. அரசியல், சமூக முன்னேற்ற எழுச்சிகளிலும் இக்காரணத்தினால் இதன் உள்ளுணர்ச்சிகள் உச்சநிலையிலிருப்பினும் போதுமான அளவு பயன்தரா திருக்கின்றன.

இறுதியாகக் கவனிக்கவேண்டுவது குடியானவர் வகுப்பு. முற்காலங்களில் நிலம் இந்தியாவில் கூட்டு முறையில் ஊரின்பொது உடைமையாகவே இருந்தது. ஒவ்வொரு ஊரைச் சுற்றிலும் உள்ள நிலத்திற்கு ஊரே உரிமையுடையதாயிருந்தது. அது நேர்மையடிப்படையாக ஊராரிடையே அவரவர் தேவைக்கும் நிலத்தின் தன்மைக்கும் ஏற்பப் பங்கீடு செய்யப் பட்டிருந்தது.பல இடங்களில் ஊர் என்பது ஒரே குடும்பமாகவே இருந்தது. கூட்டுக் குடும்பமுறை (தரவாடு) உடைமையுரிமையின் தொடர்ச்சியைக் காத்தது. உழவுத் தொழிலுக்கு பெருத்த தடைக்கல்லாக விளங்கும் துண்டாடல் நிகழ்வதையும் இது தடுத்தது. வரிமுறையும் நில விளைச்சலின் அடிப்படையில் பெறப்பட்ட தேயன்றி நிலையாக வரையறுக்கப்படவில்லை. வரி அளவு ஆட்சி யெல்லைக்கு ஆட்சி யெல்லை மாறுபட்டிருந்தது. சில இடங்களில் அது ஆண்டு வருமானத்தில் 10-இல் ஒரு பங்களவு குறைந்தும் சில இடங்களில் அதில் 4-இல் ஒரு பங்களவு உயர்ந்தும் இருந்தது. குறிப்பிடத்தக்கது அக்காலப் பண்பு பெரிய நில முதலாளி எதுவும் இல்லாததே. நிலத்தின் விளைவு முழுவதும் பண்படுத்தி யவனையே சேர்ந்தது. அவ்வப்போது சிறப்புமிக்க யாருக்காவது அரசன் ஓர் ஊரையோ சில பல ஊர்களையோ பரிசில் (ஜாகீர் அல்லது இனாம்) நிலமாகக் கொடுப்பதுண்டு. ஆனால் பெரும்பாலும் இப்பிரிவுகள் பரிசில் பெறுபவர் வாழ்க்கைக்கால அளவுக்குட்பட்டதே. மேலும் இதனாலும்