உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சமதர்ம விளக்கம்

115

அவர்கள் உறுதி கூறினாலும் எதுவும் உருவாகவில்லை. உருவாகும் என்று கருதுவதற்கு மில்லை. இங்ஙனம் தேசிய மயமாக்குதல் என்பது ஒரு முடிந்த முடிபு அன்று; ஆராய்ச்சியிறுதியில் அதன் முடிவான பயன் யார் அரசியலை இயக்குகின்றார்கள் என்பதையே சார்ந்ததா யிருக்கும்.

வினா (71) : அப்படியானால் நீங்கள் தேசியமய மாக்குதலை எதிர்க்கிறீர்களா?

விடை : அல்ல; இது எதிர்ப்பதும் ஆதரிப்பதும் ஆகிய வேறுபாடு அன்று. தற்கால சமூக அமைப்பு முறையின் சூழ்நிலையில் தேசிய மயமாக்குதல் என்பது ஒரு பொருளற்ற கூச்சல் மட்டுமே. ஏனெனில் அதனால் சமூகத்திற்கு நன்மை செய்யும் ஆற்றல் எதுவுமில்லை. தேசிய மயமாக்குவதால் உண்மையான நன்மை இருக்க வேண்டுமானால், ஒரு சமதர்ம அரசியல் ஏற்பட வேண்டும்.

வினா (72) : சமதர்ம அரசியல் எப்போது ஏற்படும்?

விடை : தற்போதைய தேக்க நிலையிலிருந்து மீள அது ஒன்றே வழியென்று மக்கள் காணும்போதுதான். நம் அரசியல் வாழ்வில் சமதர்ம நோக்கத்தின் அவசியத்தை வளர்க்கவேண்டும் நிலைமை அப்போதுதான் ஏற்படும். அதன்பயனாக இறுதியில் அவர்களுக்கு அதன் வெற்றித் திறம்பற்றிய உறுதி ஏற்படும்.

வினா (73) : பயிர்த்தொழில், உழவர் பிரச்சினைகள் ஆகியவற்றை நீங்கள் எங்ஙனம் தீர்த்துவைப்பீர்கள்?

விடை : இக்கேள்வி மிக முக்கியமானதே. ஏனெனில் நம் நாட்டு மக்கள் தொகையில் அத்தனை பெரும்பான்மை யானவர்கள் அதனையே நம்பி வாழ்கின்றனர்.

இதற்கும் மக்கள் நலன்களையும் உழவர் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டே பிரச்சினை ஆராயப்படவேண்டும். இவ்விரு சாராருக்கும் திருப்தி ஏற்படாதபோது பிரச்சினை தீர்ந்து விட்டதாகக் கருதப்பட முடியாது. இது பிரச்சினையின் வேர் முதல். ஆயினும் நம் பயிர்த்தொழிலின் நிலப்பரப்பு மிகப் பெரியதாயினும், நிலம் மிகவும் செழிப்பானதாயினும் இப்பிரச்சினை இவ்வளவு கடுமையானதாகவும் தொடர்ந்து சிக்கலானதாகவும் இருப்பதுடன், மக்களுக்கும் போதிய அளவு