உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அப்பாத்துரையம் - 46

வேண்டும்; மாட்டு வண்டிகள் படிப்படியாக மறையவேண்டும். மாட்டுவண்டிகள் இதுகாறும் நற்பயன் தந்துள்ளன. ஆனால் அவற்றின் காலம் செல்லாதாகிவிட்டது.ஒவ்வொருகிராமத்திலும் ஒரு அஞ்சல் நிலையம் (post office) ஏற்படவேண்டும். முதற்படியாக ஐந்து கிராமங்களுக்கு ஒன்றாவது எழவேண்டும். அஞ்சல் நிலையம் என்பது அவர்களுக்கு நகர்களில் வாழும் புதல்வர் புதல்வியர்க்கு எழுதும் கடிதவசதி மட்டுமன்று; அதுவே அவர்களுக்கு மிகுதி நல்வாழ்வு, மிகுதி தொழில், மிகுதி உலகத் தகவல்கள் ஆகியவற்றுக்கும் வழி வகுப்பது ஆகும். இவ்வசதிகளின் உடனடிப் பயன் இந்தியாவில் நகரங்கள் மிகுதியாவதே யாகும். இது மிகவும் முக்கியமான, அவசியமான முன்னேற்றம் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு கோடி மக்களுக்கும் 4 நகரங்களே (50,000 மக்களும் அதற்கு மேலும் உள்ளவை) இருக்கின்றன. அமெரிக்காவில் இத்தொகை 14; பிரிட்டனில் 27.

கிராம வாழ்வு வளர்ச்சி யடையவேண்டும் என்றால் அதிக நகரங்கள் ஏற்படவேண்டும். அத்துடன் நகரங்களில் வாணிகம் மிகுதியாகி அவற்றின் தொழில் வளர்ச்சியடையவேண்டும். இவ்வளர்ச்சியினால் இன்னும் பலருக்குத் தொழில் கிடைக்கும். இந்தியாவில் இது அவசியமானது; ஏனெனில் கிராமங்களின் வறுமைக்கு உழவுத்தொழிலில் ஏற்பட்டுள்ள ஆள் நெருக்கடியே காரணம். மேலும் இன்று பல மூலப்பொருள்கள் உற்பத்தித் தொழிலுக்காகப் பல நூறு மைல்கள் கடந்து பெரு நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவையாயுள்ளன. இவற்றுள் பலவற்றைப் புதிதாக ஏற்படும் நகரத்தின் தொழில்களே உற்பத்தி செய்துவிட முடியும். வை சரக்குக் கொண்டு செல்லும் செலவையும் ஏற்ற இறக்கச் செலவையும் குறைக்கவும் உதவும். உற்பத்தி யாவும் பெரு நகரங்களிலேயே வந்து குவிகின்ற போக்கு பொருளியல் முறையில் சிக்கன வாழ்வுக்கு உகந்ததன்று. சிறு நகர்த் தொழில்களுக்கு ஊக்கந் தருவதன் மூலம் இது சரி

செய்யப்படலாகும்.

கிராமத் தொழில்களை

வளர்ப்பதுபற்றிப்

று

பல

பசப்புரைகள் எழுப்பப்படுவது குறித்து இங்கே சில கூறவேண்டும். இவற்றைப் பசப்புரைகள் என்று நாம் கூறுவதற்குக் காரணம்