உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 46

132 || செயலே என்றும் நம் கருத்தில் பதியும் முறையிலேயே அது எழுதப்பட்டுள்ளது என்று தோற்றவில்லையா?

நம் கல்வி நூல்துறையில் மட்டுமல்ல விரும்பத்தகாத தாயிருப்பது. அது குழந்தையின் உடல்வளர்ச்சி, உளவளர்ச்சிகளில் கவனம் செலுத்த வில்லை. பல கல்விக்கூடங்களிலும் கல்லூரி களிலும் விளையாட்டுக் களியாட்ட அரங்கங்களிருக்கின்றன என்பது உண்மையே. ஆனால் மிகப் பலவற்றில் இவ்வசதிகள் இல்லாமலும் உள்ளன. கல்வியின் இப்பகுதி முற்றிலும் ஒவ்வொரு நிலையத்தின் விருப்பு வெறுப்பிற்கும் செல்வ ஆற்றல் நிலைக்குமே விடப்பட்டுள்ளது. அவற்றைப் பாடத் திட்டத்தினுள் ஒரு பகுதியாகச் சேர்க்கும்படி கல்வியமைப்பு வற்புறுத்தவில்லை. இத்தவறு எத்தனை தலைமுறைகளுக்கு எத்தனை கேடு உண்டுபண்ணியுள்ளது?

நம் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் செய்யப்படும் ப் பெருந் தீங்கைச் சமதர்ம அரசியல் உடனடியாக அகற்றும். அத்துடன் அது ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்திலும் சமூக மனப்பான்மை ஊறும்படி செய்யும். அவன் அல்லது அவள் இந்நாட்டின் சிறுவர்களில் ஒருவர் என்றும், இந்நாடு மொத்தத்தில் மனித இனத்தின் ஒரு பகுதி என்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்படும். மேலும் உடல் வளர்ச்சியும் சமூகவளர்ச்சி போன்றே முக்கியத்துவம் வாய்ந்ததாதலால், மலிவான செலவில் உணவூட்டும் முறைகளும் செய்து தரப்படும். இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை பால் கொடுத்தால் அதன் பலன் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்! ஒரு நேர நல்ல உணவேனும் கொடுத்தால் பயன் இன்னும் எவ்வளவு மிகுதியாகும்!!

உடல்நல ஏற்பாடுகள், தண்ணீர் வசதி ஏற்பாடுகள் முதலியவற்றைப் போலவே கல்வியும் செலவில்லாமல் லவசமாக்கப் படவேண்டும் என்பதும், அரசியலே அச்செலவை முழுவதும் ஏற்கவேண்டும் என்பதும், இக்காலத்தில் எங்கும் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியே யாகும். சமதர்ம அரசியலின் குறிக்கோள் எல்லாக் கல்விப்படிகளையும் இலவசமாக்குவதே. இன்று நன்னிலையிலுள்ள தாய் தந்தையரை யுடைய மாணவனும் வேறு வகையில் அத்தகைய வசதி பெற்ற