உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

185

கூப்பிடு தொலைகள் வரை சென்றுவிட்டனர். அதற்குள் அவர்கள் ஒவ்வொருவராகத் தத்தம் நாட்குறிப்பைக் கையில் பற்றியவண்ணம் பனியில் சாய்ந்தனர். இறுதி ஆளும் சாய்ந்து நெடுநேரம் சென்ற பின்னரே அவர்களைத் தேடியலைந்த கப்பல் தோழர்கள் அவர்களில் ஒருவர் உடல் பனி மூடாக்கில் புதையுமுன் கண்டெடுக்க முடிந்தது. அதன்பின் மற்றத் தோழர்களும் வந்து தடந்தேடி மீந்த வீரர் உடல்களையும் தேடிக் கண்டெடுத்தனர். அவர்கள் உடல்கள் பனியிலேயே அடக்கம் அ செய்யப்பட்டன. அவர்கள் நாட்குறிப்புக்களை மட்டுமே மீட்டுக்கொண்டு வர முடிந்தது. மீகாமன் உடலுடன் உடல் போக்காத தோழர்களின் வரலாறுகள் அவர்கள் எழுதிய மீகாமன் வரலாறுடன் சேர்த்து எழுதப்பட்டு உலகுக்கு அனுப்பப் பட்டன.

மீகாமனை வழியனுப்பிவந்த தோழர்களின் உடலங்களைத் தாமும் வழியனுப்பி மீண்ட கப்பலிலுள்ள துணைவர்களே உலகுக்கு இவ் வான்புகழ்த் தோழர்களின் என்புநெக்குருக்கும் வீரக்கதையைக் கொண்டுவர மீந்திருந்தனர். பனியிற் புதையுண்ட வீரர்களின் வரலாறு மீண்டும் மீண்டும்

உலகின்

இளைஞர்களின் வெவ்விழி நீரால் ஆட்டப்பெற்றுள்ளது.

இவ்வீரர்களுக்கான உலகின் இன்பங்களைத் துறந்து துணை சென்றவர்களே கப்பலில் அவர்களுடன் சென்ற துணைவர்கள். ஆனால் வீரரோ அவர்களினும் ஒருபடி கடந்து வீரமீகாமனுக்கு உயிர்த் துணைவராய்ச் சென்றனர். அம் மீகாமனோ தன் உயிரையும் உடலையும் வாழ்க்கை முழுப் பணியையும் அவர்கள் அன்புரிமையையும் சேர்த்து, உலகுக்காக, நாட்டுக்காகத் துறந்தான். இத்தனை தியாகங்களாலும் பெருமை யடைந்துள்ள இவ்வுலகில்தான், இந்நாட்டில்தான் நீ பிறந்து வளர்கிறாய். இதே உலகுக்காகத்தான், இதே நாட்டுக்காகத்தான் நீ பிறந்ததும் வாழ்வதும், வாழ்க்கைப் பணியாற்றப்போவதும், உயிர்துறக்க ஒருங்கியிருப்பதும், அவர்கள் மாபெருந் தியாகத்துக்குரிய உலகும் நாடும் உன் தியாகத்துக்கும் உரிமையுடையவையே அத்தியாகம் ஒன்றே அவர்கள் தியாகத் தைப் பெருமைப்படுத்தவல்லது. அவர்கள் தியாகத்துக்குரிய கைம்மாறு; உன் தியாகத்துக்குரிய கைம்மாறும் அவர்கள்