உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வருங்காலத் தலைவர்கட்கு

197

முயற்சியும் விலையும் குறைவே. ஆனால் அவற்றால் நீ பெறும் இன்பமும் மலிவான இன்பமே. அந் நண்பர்களும் எவ்வளவு எளிதாகக் கிடைத்தார்களோ, அதனினும் எளிதாக அகன்றுவிடுவர். முகநகப் பேசி அணைவர்; முகந் திருப்பிக் கொண்டு பேசாது அகன்றுவிடுவர். அவர்கள் நட்பு இன்பத்தில் வளரும். அவ்வின்பத்தைத் துன்பமாக்கி, அத் துன்பப் பயிர் விளைவுதருங் காலத்தில் அதில் பங்குகொள்ளக் காத்திராது மறையும். இத்தகைய தோழமைகள் தரும் போலி இன்பத்தைப் பார்க்க, அவ்வின்பங்களால் வரும் துன்பமே இனிதென்னலாம். ஏனெனில் அத்துன்பம் அவர்கள் நட்பின் போலித் தன்மையை நன்கு எடுத்துக்காட்டி நம்மைத் திருத்தக்கூடும்! மேலும் இத் துன்பங்களிடையே தான் உண்மை நண்பர்கள் வலியவந்து தம் இயல்பை உனக்குக் காட்டிச் செல்லக்கூடும். நீ அச்சமயம் அவர்களை அறிந்து கொண்டால், உன் வாழ்க்கையில் அது ஒரு நல்ல திருப்புமுகமாய் அமையும்.

தீய தோழமை நீக்கி நல்ல தோழமையும் நட்பும் பெருக்க வழி யாதெனில், இவ் இரண்டு திறங்களுக்கும் இடைப்பட்ட அடிப்படைப் பண்புகளின் வேறுபாட்டை உள்ளத்தில் வலியுறுத்திக் கொள்வதே. தீய தோழரும் தீயவரும் தத்தமக்கே இன்பம் தேடுபவர். நீ உனக்கின்பம் தேடித் தோழரைத் தேர்ந்தெடுத்தால், அவர்களும் தமக்கின்பம் தேடித் தாமே உன்னை வந்தடுப்பர். இதில் தவறும் இல்லையல்லவா? ஆனால் நட்பை நாடுவோர் தேடுவது தமக் கின்பமன்று; மன்னுலகுக் கின்பம்; அதாவது நற்பண்பு. நீ தன்னலமட்டுமே கருதாது மன்னலத்துக்கேற்ற பொதுத் தன்னலம் அல்லது தற்பண்பு நாடினால், அதனால் ஈர்க்கப்படும் உன் நண்பரும் அத் தற்பண்பினூடாகவே உன் நலத்தில் நாட்டம் செலுத்துவர். இருவரும் மன்னலம் பேணுபவராதலால், உங்கள் நட்பு, நட்புப் பண்பை வளர்க்கும்.

தீய தோழர் நாடும் இன்பத்துக்கும் நண்பர் நாடும் இன்பத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு யாதெனில், முன்னது குடிப் பெருமையை அவமதிப்பது; பின்னது குடிப் பெருமையை அடிப்படையாகக் கொண்டது என்பதே. குடிப் பெருமை என்பது பெரும்பாலும் பெண்மையின் பெருமையே