உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




200

அப்பாத்துரையம் - 46

வைக்கின்றனர். தாய்மை, துணைமை, காதன்மை ஆகிய முப்பெருந் தெய்வப் பண்புகளுக்குரிய பொன்மையை மனிதரின் அவலப்பொழுது போக்குப் பொருள்களுள் ஒன்றாக்கித் தீயோர் எவ்வுருவில் பேசுவது கேட்டாலும், அத் தீயோர் தொடர்பை மனித உலகில் வளரவிடாது மாய்விக்க உன்னாலியன்ற யாவும் செய்யக் கடவாய்! ஆனால் இதற்காக நீ வேறு எதுவும் செய்ய வேண்டுவதில்லை. அவர்கள் தொடர்பை உன் வாழ்விலிருந்து எவ்வளவு கூடுமோ அவ்வளவும் விலக்கி விடுவதே சாலும்.

குடிமைப்பண்பைக் கெடுக்கும் பண்புகளுள் முதன்மையானது குடிக்கும் பண்பேயாகும். மாட்டாகக் குடித்தல் வாழ்க்கையின் இன்றியமையாக் கூறு என்று சிலரும் கருதுவதுண்டு. ஆனால் மாட்டான குடியில்கூட ஆடவரும் பெண்டிரும் தம் குடிப்பிறப்பை மறக்கத் தொடங்கித் தாறுமாறாகப் பேசவும் செயலாற்றவும் தொடங்குகின்றனர் என்பதும். அக்குடி யில்லாதவேளை அவற்றைக் கேட்கவே அருவருக்கின்றனர் என்பதும் கவனிக்கத் தக்கது. மதுகைதராக் குடிவகை உணவின் பகுதி; மதுகை யுடையது மட்டாக வழங்கினும் எச்சரிக்கையுடன் வழங்கத் தக்கது என்பதில் தடையில்லை. ஏனெனில் அதன் நோக்கம் வேறு எதுவும் அன்று வெறும் இன்பநோக்கே; அதுவும் நேரப் போக்கின்பம் மட்டுமே; நிலையான வாழ்க்கையின்பமன்று தன் இன்பமன்றிப் பிறர்க்கான பொதுநல இன்பமுமன்று. மேலும் இன்பத்துக்காக நாடும் குடி (காப்பி, தேயிலை முதலிய) இனிய நறுநீர்ச் சிறு குடிவகைகளாயி னும் அதனை ஒத்த (புகையிலை, சுருட்டு, பொடி முதலிய) பிற பழக்கங்களாயினும் இவை யாவும் இன்பப் பொழுது போக்கை வளர்த்து, அதுவே வேலையாகத் திரியும் மக்கள் வகுப்பையும் வளர்த்து வருவது காணலாம். பொதுநலம் நாடாத இந்த இன்ப வகுப்பினரே தம்மையல்லாத பிறர் எவரையும் சில சமயம் தம் இன்ப வகுப்பினரையும் இழிவுபடுத்திப் பேசவும் நையாண்டி செய்யவும் அலைக்கழிக்கவும் முற்படுகின்றனர். இப் பழக்கங்களி லிருந்து சூதும் அதிலிருந்து திருட்டும், கொள்ளையும், கொலையும் ஏணிப் படிகள் போல் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. இவற்றுள் எப்படியில் நிற்போரும் தம்மை யறியாமலே அடுத்த படிகளை நோக்கி முன்னேறிச் செல்லக்கூடும். இவற்றுள் முதற்படியாகிய தற்புகழ்ச்சி, பிறர் பழிப்பு, பெண்பழிப்பு, சிறு