உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. முதலமைச்சராகும் இளைஞருக்கு

முதலமைச்சராக வரவிருக்கும் சீராள!

வானக நிறை அரசு எங்கிருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா?

நீ சின்னஞ் சிறு குழந்தையா யிருந்தபோது, அது உச்சிக்கு மேல் உயர இருக்கும் நீலவானில் எங்கோ இருப்பதாகத்தான் எண்ணி யிருப்பாய். நீ பள்ளிக்குச் சென்று பல செய்திகளை உணர்ந்து அறிவு பெறுந்தோறும், எத்தகைய அரசும் அப்படி வான வெளியில் இருக்க முடியாதென்பதை நீயாக அறிந்து கொண்டிருப்பாய். மேலும் வாய் அசையாமல், பிறருக்குத் தெரியாமல், மனத்திற்குள்ளாகவே நாம் வணக்கம் கூறுவதை நீ அறியக்கூடும். கடவுள் அவ்வளவு எட்டாத தொலைவில் இருப்பார் என்று நினைப்பதும் பொருத்தமற்றது என்பதை நீ எண்ணிப் பார்த்திருக்கலாம்.

கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார் என்று உன் தாய் நீ சிறு பிள்ளையாயிருக்கும்போதே உன்னிடம் கூறியிருப்பதும் உன் நினைவுக்கு வரலாம். ஆம்! வானக நிறை அரசும் உனக்குள்ளேயே இருக்கிறது; இதுதான் மெய்யான உண்மை! அவ்வரசு இருக்கும் வானகம் தலைக்கு மேல் உள்ள புறவானகம் அன்று; உன் நெஞ்சகத்திற்குள்ளேயே இருக்கும் அகவானகம். நீ ஏன் வெளிக்குத் தெரியாமல் மன மனத்திற்குள்ளாகக் கடவுளை வணங்குகிறாய் என்பது இப்போது உனக்குத் தெரிகிறதல்லவா?

66

கடவுள் உனக்குள்ளேயே இருக்கிறார்... வானக நிறையரசும் உனக்குள்ளேயே இருக்கிறது” இவை‘மறைநூல்’ உரைகள். அட்தெய்விக வாய்மொழி' ஏட்டில்கூட, இதனினும் சீரிய வாசகம் கிடையாது. எதிர்காலத்தை நோக்கி முன்னேற விரும்பும் சிறுவனே! சீரும் புகழும் சிறப்பும் நாடும் இளைஞனே!