உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




7. நகர் முதல்வராகும் இளைஞருக்கு

நகர் முதல்வராக வரவிருக்கும் நற்பண்பாள!

நீ நாட்டுப்பற்று மிக்கவன்; நாடு கடந்து உலகப்பற்றும் மனிதப்பற்றும் உடையவன். ஆனால் நீ நகர் முதல்வனாக வேண்டும் என்று கனவு கொள்கிறாய் நன்று. மிக நன்று அறிவாற்றல் மிக்க உன் துணிவை நான் பாராட்டுகின்றேன்.

நீ இயற்கை உணர்ச்சியால் தேர்ந்தெடுத்துக் கொண்ட தேர்வுக்கு ஏன் இத்தனை பாராட்டு என்று கருதலாம். இது ஒருமாதிரி முகமன் புகழ்ச்சி என்றும் நீ எண்ணக்கூடும். அல்லது உன் கனவின் குறுகிய எல்லையை மறைத்துப் பெருந்தன்மை யுடன் கவிதை புனைகிறேன் என்றுகூட நீ கருதலாம். ஆனால் மெய்ம்மை அதுவன்று. நீ இயற்கை உணர்ச்சி என்று கொள்வது முற்றிலும் இயற்கை உணர்ச்சியன்று; உன் சூழ்நிலைகளின், உன் பண்பாட்டின் பயன் இதே சூழ்நிலை மற்றச் சிறுவர் சிறுமியர் களுக்கும் உண்டு. ஆனால் ஒவ்வொருவரும் அதைத் தத்தம் இயல்புகளுக்கேற்ப, தத்தம் பொதுச் சிறப்புப் பண்புகளுக்கேற்ப, ஒவ்வொரு வகையில் பயன்படுத்தி ஒவ்வொரு வகை இயற்கை உணர்சியையும் கனவையும் வகுத்துக் கொண்டுள் ளனர். ஒரே நிலத்தில் இட்ட பல விதைகள் பலவகைச் செடி கொடிகள் தருவது போலவேதான் இது. நிலத்தின் இயல்பும் விதையின் இயல்பும் சேர்ந்தே செடியாவது போல. உன் இயல்பும் உன் சூழ்நிலையின் இயல்பும் சேர்ந்தே உன் வாழ்க்கை யுணர்ச்சி யாகிறது.இவ்விருவகை இயல்புகளில் எது மாறினாலும் வாழ்க்கை நிலை மாறும். ஒரேவிதை பல நிலங்களில் பல்வாறாகவும், ஒரே நிலத்தில் பலவிதை பலவாறாகவும் ஆவது உண்டல்லவா?

உன் பண்பாட்டு நில இயல்பு, உன்னை நாட்டுப்பற்றாள னாக, உலகப் பற்றாளனாகச் செய்துள்ளது. ஆனால் உன் இயல்பு, உன் தனிப்பட்ட வித்தியல்பு உன்னை நகர்த்தொண்டில்