வருங்காலத் தலைவர்கட்கு
253
நான் கல்வி நிலையத்தில் பயிற்சி முற்றி வெளிவந்து சில நாட்கள்தாம் ஆகின்றன. உன் கல்வி நிலைய ஆசிரியர் போன்றே எனக்கும் திறமை மிக்க ஆசிரியர் இருந்தனர், ஆயினும் இன்று நான் பள்ளிவிட்ட காலத்தை நினைத்துக் கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அச்சமயம் எனக்கிருந்த வாய்ப்புக்கள் பெரிது. ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் வகையினை நான் அன்று அறிந்ததினும், இன்று நன்கு அறிகிறேன். பள்ளியாசிரியரி னும் போதனா முறையில் கைவந்த வேறொரு ஆசிரியர், எனக்கு இன்று நல்ல படிப்பினைகள் தந்துள்ளார். அவர் பெயர் அனுபவம்' என்பதே. ஆனால் இவ்வனுபவம் பெற்ற இக்காலத்தில் என் வாய்ப்புக்கள் அன்றைவிடக் குறைவு. கல்விப் பயிற்சி என்பது என்ன என்பதை நான் இப்போதுதான் உணருகிறேன். அனுபவம் பெற்று, வழி தெரிந்தவர்கட்கு அதனைச் செயற்படுத்தும் வாய்ப்புக் குறைவா யிருப்பதால், வழி தெரியாது வாய்ப்பு நிறைய உடைய இளைஞர் கட்கு அவர்கள் அதை வழங்கிச் செயற்படுத்த முனைகின்றனர். இதையே நாம் கல்விப்பயிற்சி என்கிறோம்.
எனது இன்றைய அனுபவ அறிவு அன்றிருந்தால் நான் என் முயற்சி மூலம் உலகுக்குத் தந்திருக்கக் கூடும் நிறை பயனை. இன்று உன் போன்றவர் அடையச் செய்ய முடியுமானால் அதன்மூலமும் நிறைவேற்றலாமல்லவா? ஆனால் இதனை நீ செய்து முடிக்க, உன் நிலைமையிலுள்ள வாய்ப்பின் அருமையை நீ நன்கு உணர்தல் வேண்டும். உனக்கு இன்றிருக்கும் வாய்ப்பு, நீ எங்கள் நிலையை அடையும்போது குறைந்துவிடும். வாய்ப்பு நிறைய உள்ள இந் நேரமே விலை மதிப்பேறிய நேரம். இதனை வீண் போக்காது பயன்படுத்துவதிலேயே உன் கனவின் வெற்றியும், எங்கள் கனவின் வெற்றியும் அடங்கியுள்ளது. உலகில் பெருவெற்றி கண்டவர்கள் கூட உங்கள் நேரத்தை மீட்டும் பெறத் தங்கள் வாழ்வைப் பிணையம் வைக்கத் தயங்க மாட்டார்கள். எனவே காலத்தின் அருமையறிந்து, இச்சமயத்தைப் பிறர் அனுபவ அறிவின் படிப்பினைகளை அறிவதிலும், அறிந்து திட்டமமைப்பதிலும் செலவிடுவதே இன்று நீ செய்ய வேண்டும். இன்றியமையாச் செயலாகும். வேறு எந்த வாழ்க்கைப் பருவத்திலும், நீ நேரத்தைச் சிறிது புறக்கணிக்கலாம். இன்று நீ