உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 46.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 46

பரிமாறப்படுவதுமே ஆகும். அரசாங்கம் ஒரு சமூகத்தொண்டு ஆற்றுவதானால், மக்கள் பேராண்மை (பிரதிநிதித்துவம்) மூலமே அது மிகச் சிறப்புறும், ஒவ்வொரு மனிதனும் அவன் தொழில் எத்தகையதாயினும், சரிசம உரிமையுடையவனாய் யார் மீதும் எத்தகைய ஒருச்சார்பும் இல்லாதிருப்பதே அப்பேராண்மையின் அடிப்படை. சில முதலாளித்துவ நாடுகள் வயது வந்தவர் மொழியுரிமை வழங்கியுள்ளதன் மூலம் தம் மக்களுக்கு இவ்வுரிமை தந்துள்ளனர். ஆனால் வயதுவந்தவர் மொழியுரிமை எல்லாத் தீங்குகளுக்கும் ஏற்ற ஒரே சஞ்சீவியாய் விட மாட்டாது. அது பல இடங்களில் தவறான வழியில் பயன்படுத்தவும் படுகிறது. எந்த அரசியலுரிமையும், அதனுடன் சில தடையற்ற சமூக, பொருளியல் உரிமைகளும் தரப்பட்டாலல்லாமல் பொருளற்ற வீணுரிமைகளாகவே போய்விடும். சமதர்மம் நாடும் சமத்துவம் அரசியல் சமத்துவம் மட்டுமன்று; பொருளியல், சமூக சமத்துவமும் கூட. இந்நிலையை உண்டு பண்ணும் வகையில் சமதர்ம அரசியல் சில உரிமைகளை அளித்து வேறு சிலவற்றைப் பின்வாங்கிக் கொள்ளும். ஒட்டும் வழுவும் அறப் பின்வாங்கிக் கொள்ளக் கூடியது உற்பத்திச் சாதனங்களின் தனிப்பட்ட உடைமை யுரிமையே. நாம் மேலே கூறியபடி இவ்வுரிமை முன்பு முதலாளித்துவத்தினால் நில உடைமைப் பெருமக்களிடமிருந்து பறிக்கப்பட்டதேயாகும்."உற்பத்திச் சாதனங்களின் தனிப்பட்ட உடைமை உரிமை” என்ற இத்தொடரை நன்கு ஊன்றிக்கொள்க. இதன் பொருள் யாதெனில், தொழிற்சாலைகள், நிலம், கப்பல்கள் முதலியனயாவும் தனி மனிதர்கள் உடைமையாயிருக்க இணங்கப் பட மாட்டாது; ஆனால் தனிப்பட்டவர் பயன்படுத்தும் உடைமை யுரிமைக்கு இணக்கம் அளிக்கப்படும். வாழும் வீடு உடைமையாகலாம்; நிலமும் அதனை உடையவனே பண்படுத்துவ தானால் உடைமையாகலாம். ஆடைகள், உந்து வண்டிகள் (மோட்டார்கள்), வானொலிப் பெட்டிகள் (ரேடியோக்கள்) ஆகியவற்றை உடைமையாகக் கொள்ளக் கட்டாயம் உரிமை உண்டு. ஒரு நாட்டின் குடியுரிமையாளனுக்குத் தடுக்கப்படும் உடைமைகள் ஆவன: தொழிலாளர் உழைப்புக்குத் தேவைப்படுபவையும், பெறுபவன் தானே பயன்படுத்தாதவையும்

மட்டுமே.