(110)
||
அப்பாத்துரையம் - 5
செய்துவரும் வீரர் நமது நன் மதிப்பைப் பெறுவார்" என்று சீற்றத்துடன் பேசினார்.
அவையோர் மௌனம்
'நாகம நாயக்கர் சிறந்த வீரர்; பல போர்களில் வெற்றி மாலை புனைந்தவர்; மஹா வீரராகிய விசுவநாதர்க்குத் தந்தையார்; பிரபுக்களில் முதல் வரிசையில் இருப்பவர். அச்சிறப்புடைய பெரியவரை நாம் எவ்வாறு போரில் வென்று சிறைப்பிடித்து வருவது! இஃது இயலாத காரியம்... பேரரசரோ சீற்றத்துடன் காண்கிறார்' என்று அவையோர் தமக்குள் எண்ணி, வாளா இருந்தனர்.
இருவர் துடிப்பு
ளைஞர் இருவர்
அவ்வமயம் அவையில் இருந்த மாத்திரம் துடித்துக் கொண்டு இருந்தனர். பேரரசர் சீற்றவுரை அவர்கட்கு, இராஜபக்தியையும் வீரவுணர்ச்சியையும் ஊட்டியது. அவர்கள் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. அவர்கள் ஏதோ கூற எழுந்தனர்; பின் உட்கார்ந்தனர். சுருங்கக் கூறின், அவர்கள் தம்மை மறந்த சீற்றத்தில் ஆழ்ந்திருந்தனர்; ஆனால், என்ன பேசுவது என்பது அறியாமல் விழித்தனர். அவர்கள் யார்? ஒருவர் விசுவநாதர்; மற்றவர், அரியநாதர்.
இராயர் எழுச்சி
இராயர் சீற்றத்துடன் பேசிய பிறகு அவையினரைக் கூர்ந்து நோக்கினர்; ‘யான் இப்பணியை முடித்து வருவேன்' என்று ஒருவரும் முன் வராதது அவருக்குக் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உண்டாக்கியது. அதனால் வெகுண்ட இராயர், “எம் கட்டளையை நிறைவேற்றத் தக்க வீரர் ஒருவரும் இங்கு இல்லையா? நல்லது. நாமே புறப்பட்டுப் பாண்டி நாடு சல்வோம்” என்று கூறித் தம்மை மறந்த ஆத்திரத்துடன் ஆசனத்தை விட்டு எழுந்தார்.
'நான் போவேன்’
‘அரசே நான் போவேன்' என்று எழுந்தார் ஒருவர். அவர் யாவர்? அவரே விசுவநாதர். பேரரசரது இறுதி வாக்கியத்தைக்