உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

அப்பாத்துரையம் - 5

தாளமாகக் கொண்டு பாடி ஆடுவர். இங்ஙனம் நாட்டிற்கு முதுகெலும் பாகவுள்ள உழவர் மகிழ்ந்தாடுகின்ற நன்னாட்டை யுடைய அரசே, பல் பழங்களை உண்ண விரும்பி, 'வானத்தில் உயரப் பறந்து, மலைக் குகைகள் எதிரொலி முழங்கப் பறவைகள் குதூகலித்துச் செல்கின்றன. ஆயின், நாடிச் சென்ற மரம் பழுத்து ஓய்ந்துவிட்டதை அறிந்து வருந்திப் பழம் பெறாமல் மீள்கின்றன. அவற்றைப் போல பிறரால் விரும்புதற்குரிய உன் நற்குணங்கள் பலவும் கேள்வியுற்று உன்னைக் கண்டு பரிசில் பெறுவோம் என்னும் நம்பிக்கையுடன் பல காவதம் கடந்து வந்தேன். இப்பொழுது வெறுங்கையனாய் மீள்கிறேன். வாட்போரில் சிறந்த அரசே, நீ பரிசில் கொடாய் ஆயின், அதற்கு யான் வருந்தவில்லை; ஆனால், புலவரை அவமதித்ததால் துன்பப்படுவாயே என்பதற்குத்தான் வருந்துகிறேன். உனது இழி செயலை உன் அவையாரைத் தவிர மற்றையோர் அறியா திருப்பாராக!” என்று உரைத்துவிட்டுச் சென்றார். சில நாட்கள் கழிந்தன. மூவனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் போர் மூண்டது. அப்போரில் மூவன் வெல்லப்பட்டான். அவன் பல், தொண்டி நகரத்துக் கோட்டைக் கதவில் பதிக்கப்பட்டது. இது பெரியோரை அவமதித்ததால் வந்த பரிசுபோலும்!

புலவர் பாக்கள்

பெருந்தலைச் சாத்தனார் சாத்தனார் என்ற நமது புலவர் பெருமானுடைய பாக்கள் புறநானூறு முதலிய நூல்களில் காணக் கிடக்கின்றன. அவை எளிமையும் இனிமையுமான செந்தமிழ் நடையில் இயன்றவை. இச்சாத்தனார் போன்ற புலவர் பெருமக்கள் பலர் வரலாறுகள் அந்நூல்களைக் கொண்டே தொகுத்தறிய வேண்டும். தமிழ் மாணவராகிய நீங்கள் இப்பணியில் முனைந்து, நம் தாய்மொழியாகிய தமிழை மேல் நிலைக்குக் கொண்டுவர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!