உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
92 ||

அப்பாத்துரையம் - 6




வங்கம் தந்த சிங்கம் நேதாஜியின் வீர உரைகள்



21-10-1943இல் மாவீரன் நேதாஜி அவர்கள் சிங்கப்பூரில் சுதந்திரக் கழக மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையும், அதே நாளில் (21-10-1943) பிற்பகலில் நேதாஜி அவர்கள் இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்காக அமைத்த தற்காலிக அரசமைப்பு பற்றிய அறிவிப்பும், 22-10-1943இல் ஜான்சி இராணி படைப்பயிற்சி முகாமை தொடங்கி வைத்து நிகழ்த்திய உரையும், 25-10-1943இல் மலேயா- இந்திய செல்வந்தர்கள் மாநாட்டில் பேசியபோது நேதாஜி விடுத்த வேண்டுகோளும், 04-07-1944இல் கிழக்காசிய இந்தியர்கள் நடுவில், இந்தியர்களைப் பார்த்து இந்திய விடுதலையை வென்றெடுப்பதற்கு இரத்தம் கொடுங்கள், நான் விடுதலையை வென்றெடுத்துத் தருகிறேன் என்று பேசிய பேச்சும், 06-07-1944இல் காந்தியடிகளுக்கு உள்ளம் நிறைந்த அன்பு காணிக்கையாக வானொலி மூலம் வாழ்த்து பெற விழைந்த செய்தியும், 08-07-1944இல் பர்மாவிலிருந்து இந்தியர் களுக்கு வானொலி மூலம் இந்திய விடுதலையை பெறுவதற்கு தெளிவு படுத்திய உறுதிமொழியும், 11-07-1944இல் சக்கரவர்த்தி பகதூர் ஷாவின் கல்லறையிலிருந்து நேதாஜி ஆற்றிய உரையும், நேதராஜியின் வரலாறு என்பதால் அவர் ஆற்றிய வீர உரைகள் இந்நூலுள் சேர்க்கப்பட்டுள்ளது