96 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
பெறுவதென்ற உறுதி நாளுக்கு நாள் உரம் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.
சென்ற ஜூலையிலிருந்து மலேயா-தாய்லாந்து பர்மா- இந்தோ சைனா ஆகிய இடங்களில், நான் சுற்றுப் பிரயாணம் செய்ததை நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அவ்விடங்களில் நான் சந்தித்த நம் தாய்நாட்டு மக்களிடம் வைராக்கியம் தோன்றி யிருப்பதைக் கண்டேன். அவர்களது மனோபாவம் எனக்கு உத்சாகத்தையும், ஏற்கனவே இருந்த நம்பிக்கையையும் மேலும் வளர்த்து விட்டது. அது மட்டுமல்ல, நமது எல்லாவித முயற்சிகளுக்கும் பெரும் பக்க பலமாகவும் ஆகிவிட்டது. சென்ற ஆகஸ்டில் பர்மா சுதந்திரமடைந்த செய்தியும், இந்த மாதம் பிலிப்பைன் சுதந்திரப் பிரகடனம் விடுத்ததும், இந்தியாவின் உள்ளேயும் வெளியேயுமுள்ள இந்தியர்களுக்கு மகத்தான உணர்ச்சியைக் கிளப்பியிருக்கின்றன. அவ்விரு சுதந்திர சர்க்கார்களுக்கும், கிழக்காசியாவிலுள்ள நாமனைவரும் அவைகளின் சுதந்திர தின வைபவங்களைக் கொண்டாடிய தோடு நமது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறோம்.
ஆசியாவின் இறுதி விடுதலையைக் கொண்டுவரும் பொறுப்பு, இப்பொழுது நம்மை எதிர்நோக்கியிருக்கிறது. பிரிட்டிஷாரையும் அவர்களது துணைவர்களையும் இந்திய மண்ணிலிருந்து விரட்ட வேண்டியது நமது கடமையாகும்.பர்மா பிலிப்பைன் சுதந்திர தினங்களை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடிய நாம், அதே மூச்சில் நமது மகத்தான பொறுப்பையும் முன்னைவிட அதிகமாக உணர்ந்திருக்கின்றோம். அதிர்ஷ்ட வசமாக, தாய்லாந்தின் பிரதமர் - இதர மந்திரிகள், பர்மாவின் பிரதமர் டாக்டர் பாமா இதர மந்திரிகள் எல்லோரையும் தனித்த முறையில் சந்தித்தேன். அவர்கள் மூலம் அவர்களுடைய சர்க்கார்களிடமிருந்து, நமது போருக்கு வேண்டிய அனுதாபத்தையும் நல்லெண்ணத்தையும் பெற்றுவிட்டேன். அவர்கள் நமது போராட்டத்தின் ஒவ்வொரு