உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 105

இந்திய மக்களின் விருப்பதுக்குக் கிணங்க அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான நிரந்தரச் சுதந்திர சர்க்காரை அமைக்கவும், இந்தத் தற்காலிக சர்க்கார், வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யும். அந்த நிரந்தர சர்க்கார் ஏற்படும் வரை, இந்தத் தற்காலிக சர்க்காரே இந்திய மக்களின் சார்பில் நாட்டு விவகாரங்களை நிர்வகிக்கும். இந்திய ஆண் பெண் அனைவரையும் இந்தத் தற்காலிக சர்க்காருக்கு உதவும் படியும் தங்கள் விசுவாசத்தை அளிக்கும் படியும், அறை கூவியழைக்க இந்த சர்க்காருக்கு உரிமையுண்டு. மதச் சுதந்திரமும், சரிசமப் பிரஜா உரிமைகளும், இந்திய மக்கள் எல்லோருக்கும் நேரிய முறையில் அளிப்பதாக இந்த சர்க்கார் உறுதிமொழி கூறுகின்றது. இமயம் முதல் குமரிவரை வாழும் இந்தியர்கள் யாவரும் சுபிட்சமாகவும் பொங்கும் பொருளாதார நலங்களுடனும் வாழுவதற்குரிய வகையாவையும் வகுப்பதே, இந்த சர்க்காரின் தலை சிறந்த இலட்சிய மென்பதை உலகத்தாருக்குப் பறைசாற்றுகின்றது. ஏற்கெனவேயுள்ள அன்னிய ஆட்சியின் சூழ்ச்சியால் நிலவுகின்ற வேற்றுமை யனைத்தையும் ஒழித்து, ஏற்றத் தாழ்வில்லாத நிலைமையை இவ்வரசாங்கம் சிருஷ்டிக்குமென உறுதி கூறுகிறது.

பேரருட் கடவுள் திருவடி யாணை;
பிறப்பளித்து எமை யெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் எம்மரு நாட்டின மீதாணை;
நம் தாய்நாடு வாழ்க வென வீழ்ந்த விழுமியோர்
திருப் பெயர்கள் அதன் மிசை யாணை;
பாரத நாட்டின் வெம்பிணியில் ஈடுபட்டு சொல்லரிய
அளப்பில்லாத தியாகங்கள் செய்துள்ள தவராஜ கோளரிகளின்

மீதாணை

இந்திய மக்களே! உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். தாய்நாட்டின் விடுதலை உங்கள் லட்சியம்; தாய் மணிக் கொடியின் கீழ் ஒன்று கூடுங்கள்; ஆயுதம் ஏந்துங்கள்; அன்னியனை விரட்டக்கங்கணம் கட்டுங்கள்.நடைபெற விருக்கும் இறுதிப் போரில் வெற்றி அடையும் வரை, எந்த இடுக்கண்