நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 109 |
தியாகத்தில் பங்கு பெற்றனர். சிறையென்றால் திடுக்கிடும் காலம் அது. அப்பொழுதே ஆண்களோடு பெண்களும் சிறை வாழ்க்கைக்குப் போட்டியிட்டார்கள். அதனால், கல்கத்தாவிலுள்ள இரண்டு சிறைக்கூடங்களும் நிரம்பி விட்டன. புதிய சிறைச்சாலைகள் கூட கட்ட நேர்ந்தது. அவைகளும் சில தினங்களில் நிரம்பி விட்டன.
சிறை வாழ்க்கை இந்தியர்களுக்கு அச்சம் தரவில்லை யென்பதைக் கண்ட பிரிட்டிஷார், வேறு முறைகளைக் கையாளத் தொடங்கினர். தலைவர்களைச் சிறையில் தள்ளி விட்டு, பொது மக்களைக் குண்டாந்தடியாலும் துப்பாக்கிக் குண்டாலும் அடக்க முயன்றார்கள். இந்த அரக்கத்தனத்துக்கு இரையாகக்கூட ஆண்களோடு பெண்களும் தயாராகிவிட்டனர். ஒரு நிகழ்ச்சியை என்னால் மறக்கமுடியவில்லை. பிரிட்டிஷ் சர்க்காரின் உத்தரவை மீறி கல்கத்தாவில் ஓர் ஊர்வலம் நடத்தினோம். அதைக் கலைக்கத் தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டது. அது சமயம் ஊர்வலத்திலிருந்த பெண்கள், அந்தக் குண்டாந்தடிகளைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், எங்களுக்கும் போலீசாருக்கும் இடையிலே அணிவகுத்து நின்றதைக் கண்டேன். அவ்வளவு துணிவு கொண்டவர்கள் நமது பெண்கள்.
அதைப் போலவேதான் இந்தியாவில் நடந்துள்ள புரட்சி இயக்க நடவடிக்கைகளிலும் மிகுந்த தைரியத்துடன் நின்று அருஞ்செயல்களைச் செய்திருக்கின்றனர். வங்காளத்திலே யிருந்த ராஷ்டிர மகிளா என்ற பெண்கள் சங்கம், 1928 டிசம்பரில் 500 பெண்களடங்கிய ஓர் தொண்டர் படையைத் திரட்டிற்று. அவர்களது பயிற்சியும் அணிவகுப்பும் கண்ட எனக்கு அப்போதே ஒரு நம்பிக்கை பிறந்தது. போதிய ஊக்கமும் வசதியுமளித்தால், சந்தர்ப்பம் வரும்போது அரும்பெரும் சேவைசெய்ய வல்லமை படைத்தவர் களாயிருப்பார்களென்பது அந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஈடேற, இன்று இந்தப் பயிற்சிமுகாம் தயாராகி விட்டது. இவ்வளவு காலதாமதத்துக்கு அவர்களல்ல-காரணம். தகுதியான இடமும் இதர ஏற்பாடுகளும் தயாரிப்பதில் தான் காலதாமதம் நேர்ந்தது. இதற்கிடையில் நமது சகோதரிகள் பொறுமையிழந்து கவலையுற்றதும், ஒன்று கூடி “எங்களை