136 || |
அப்பாத்துரையம் - 6 ——————————————— |
கிழக்காசியாவிலுள்ள இந்தியர்கள், சொந்த முயற்சி எதுவும் செய்யாமலும் அதிகப்படியான தியாகம் செய்யாமலும் ஜப்பானின் உதவியை எதிர்பார்த்தால், அந்தத் தவறான நடத்தைக்கு ஜவாப்தாரியாக வேண்டியதுதான்.ஆனால் நான் ஓர் இந்தியன் என்ற முறையில், ‘இந்தியச் சுதந்திரப் போருக்குத் தங்கள் சக்தி கொண்ட மட்டும் ஆள்-பணம்- சாதனம் எல்லாவற்றையும் திரட்டிக் குவிப்பதில் கிழக்காசிய இந்தியர்கள் முன்வந்துள்ளனர்' என்பதைத் தங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். தேச ஊழியத்துக் காகத் தாய் நாட்டிலேயே ஆள் பணம் சாதனங்களைத் திரட்டுவதில் 20 வருட அனுபவம் பெற்றிருக்கிறேன். அந்த அனுபவம் இன்று பேருதவியாயிற்று. இப்பொழுது கிழக்காசிய இந்தியர்களின் முயற்சி பெருமிதங் கொண்டிருக்கிறது. அவர்களின் தியாக சக்தி அளவிடற்கரியது. அவர்களது உணர்ச்சி மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கிறது. அவர்களது பேராதரவும் பணமும் நிறைய குவிந்து கொண்டிருப்பதால், நம்மால் உற்பத்தி செய்ய முடியாததும் நமக்குத் தேவையானதுமான ஆயுதங்களையும் தளவாடங்களையும், ஜப்பானிடமிருந்து பெற்றுக் கொள்வதில் எந்தவிதத் தவறுமில்லையே!
மகாத்மாஜி!
இங்கு நம்மால் நிறுவப் பெற்றிருக்கும் தற்காலிக சர்க்கார் பற்றிச் சிறிது சொல்ல விரும்புகிறேன். ஆஸாத் ஹிந்த் தற்காலிக சர்க்காரை, ஜெர்மனியும் ஜப்பானும் அங்கீகரித்திருக்கின்றன. தவிர அவைகளின் ஏழு நேச நாடுகளும் அங்கீகரித்துள்ளன. உலகத்தின்முன் ஓர் தனி மதிப்பும் கௌரவமும் பெற்றிருக்கிறது நம் சர்க்கார். ஆகவே, பிரிட்டனிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்ய இந்த ஆஸாத் ஹிந்த் சர்க்கார் ஆயுதம் தாங்கிய போரை நடத்த வேண்டியிருக்கிறது. இந்தியாவிலிருந்து நமது எதிரிகள் ஒழிந்தபின் சட்டமும் சமாதானமும் நிலை நிறுத்தப்பட்டதும், இந்த சர்க்காரின் வேலை முற்றுப்பொறும். பின்னர், இந்திய மகாஜனங்கள் தாங்களாகவே தங்கள் விருப்பம்போல் நிரந்தர சர்க்காரை நிறுவுவதற்கும் அதன்