உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 141

பெற்றிருந்தார்கள்; சிறப்பாக தங்களுக்கு உரிமையான அல்ஸாக் லாரெய்ன் பிரதேசத்தைத் திரும்ப அடைந்தே தீர வேண்டுமென்றும் உறுதி கொண்டிருந்தார்கள். ஆகவே, “வெற்றி அல்லது மரணம்” என்ற உணர்ச்சி மேலீட்டால் ஒத்து நின்று போரிட்டனர். ஆனால் ஜெர்மன் இராணுவமோ, சிறந்த பயிற்சியும் பலமும் முஸ்தீபுகளும் பெற்று இயந்திரம் போல் போரிட்டதெனினும், பிரஞ்சு ராணுவத்திடமிருந்த உணர்ச்சித் துடிப்பு அதனிடம் மிகமிகக் குறைவு. இந்த உண்மை, நேசதேசத் தலைமைத் தளபதி மார்ஷல் போக் என்பாரின் வாழ்க்கைச் சரித்திரத்தைப் படித்தால் நன்கு புலனாகும். ஜெர்மனி நீண்டகால தாக்குப்பிடிக்க முடியாதபடி அவ்வளவு மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம் சீர்கேடுற்றதும் மற்றொரு காரணம்.

இந்த யுத்தத்தின் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இன்றைய ஜெர்மனி, தனது தவிர்க்கமுடியாத தேவைகளுக்காகவும், நெருக்கடியான குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காகவும் போரிடுகின்றது. யுத்தம் தொடங்கு முன்பே ஜெர்மனியர்கள் அனைவரும் உணர்ச்சியில் பயிற்சி பெற்றுவிட்டனர். 'இந்த யுத்தத்தில் ஜெர்மனி தோற்றால், நிச்சயமாக ஜெர்மன் சமூகமே அழிந்துவிடும்' என்ற உணர்ச்சி ஒவ்வொரு ஜெர்மானியன் உள்ளத்திலும் பாய்ந்து விட்டது. சுருங்கக் கூறினால், சென்ற யுத்தத்தின்போது நேசநாட்டினர், குறிப்பாக பிரஞ்சு தேசத்தார் கொண்டிருந்த ஆத்மீக உணர்ச்சிப் பெருக்கை இப்பொழுது ஜெர்மனியர்கள் தங்களுக்கு உரிமையாக்கி விட்டார்கள்.பழைய அனுபவத்தின் காரணமாக, உள்நாடுக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்கு வருடத் திட்டம் மூலம் சேகரித்த பின்னர்தான் யுத்தத்துக்கு அது தயாராயிற்று. தவிர, ஜெர்மனி யானது, ருஷ்யா நீங்கலாக ஐரோப்பா முழுமையையும் கட்டுப்பாட்டின்மூலம் தன் வசப்படுத்திக்கொண்டு, யுத்தக் காலப் பொருளாதாரத்தையும் பலப்படுத்திக் கொண்டிருக் கிறது. ஆகையால், நீண்ட கால யுத்தத்தையும் கப்பல் தடைகளையும் தாங்குவதற்கு சக்தி பெற்றுவிட்டது.

சென்ற யுத்தத்தில் பிரஞ்சு தேசமும் இத்தாலி தேசமும் ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்டன. பிரஞ்சு தேசம் தனது