உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 143

முனையிலும், தோல்விமேல் தோல்வி கண்டு துன்பப்பட்டது ஒருபுறமிருக்க, அவர்களது தேச மக்களின் உற்சாகத்தைக் காப்பாற்ற எல்லாவகையிலும் பெரும் முயற்சியும் எடுக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது, தினந்தோறும் அமெரிக்கா வின் உற்பத்திச் சாதனங்களை வானளாவப் புகழ்ந்து பேசினார் கள்; அமெரிக்கர்களால் கிடைக்கப்பெறும் பொருளாதாரப் பெருக்கத்தை வியந்து கூறி, வெற்றி நிச்சயமென்று நல்லெண்ணத்தைப் பரப்ப முயன்றார்கள். இந்தியாவுக்கென அவர்கள் செய்த பிரச்சாரம் என்ன? யுத்தத்தின் பின்னர், இந்தியாவைப் புனருத்தாரணம் செய்யப் போவதாகவும், அதற்காக சபைகளையும் சேமிப்பு நிதிகளையும் தயாரித்து வருவதாகவும் ஓயாமல் பிரச்சாரம் செய்து, பிரிட்டனின் வெற்றியில் இந்தியர்களின் கவனத்தைத் திருப்ப முழுக் கவனம் செலுத்தினர். ஆனால் அமெரிக்கா யுத்தத்தில் குதித்த நேரம் வரை ஆங்கிலேயரின் பிரச்சாரமெல்லாம் பலன் தரவில்லை. இந்நேரத்தில், நேச நாட்டினருக்கு ஐரோப்பாவின் நிலைமை சிறிது சாதகமாக இருக்கிறது. அந்தச் சிறிது சாதகங்களையும் கவனமாக ஆராய்ந்தால், அந்த வெற்றிகளுக்குப் பெரும் பான்மையான காரணம் அமெரிக்காவின் உதவிதான் என்பது விளங்கும்.

இன்று நேச நாட்டாரிடம் காணப்பெறும் உணர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களிடமில்லை. இன்றைய உணர்ச்சிக்குக் காரணம் அமெரிக்காதான். ஆயினும் பிரிட்டனின் தலைமை இன்னும் ஏழ்மையாகத்தானிருக்கிறது. அதனால்தான் அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரிட்டிஷ் பிரதமர் சரணாகதியடைந்திருக்கிறார். அமெரிக்கத் தளபதியின் கீழ் ஒன்றுபட்டுப் போரிடவும், மதிப்பிலா பிரிட்டிஷ் பிரதேசங்களை அமெரிக்காவுக்குக் கொடுத்து அதிகச் சலுகை காட்டவும் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஏகாதிபத்தியத்தின் வைரத்தூண் வின்ஸ்டன் சர்ச்சில், "அமெரிக்க சகாப்தம்" என்று அமெரிக்கர்கள் கூறுவதையும், சர்ச்சிலின் சகாக்களும் அன்புக்குரிய தாசர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுகிறார்கள். அமெரிக்காவின் சக்தி முதல்தரமாகயிருப்பதால் அமெரிக்கா விரும்பும் பிரதேசங்களையெல்லாம் ஒப்படைத்து விட்டு, அமெரிக்காவின் தயவில் தங்கள் ஏகாதிபத்தியத்துக்கு இடம் தேடிக்கொள்ள,