நேதாஜியின் வீர உரைகள் ——————————————— |
|| 153 |
நடத்துவோமென்று, கிழக்காசியா முழுமையுமுள்ள இந்தியர் கள் தங்கள் பிரதிக்ஞையைப் புதுப்பித்திருக்கும் சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டதால், இந்திய வெற்றி மகத்துவம் பெற்றுவிட்டது. முதலாவது சுதந்திரப் போரை நடத்திய தளபதியின் மரண பூமி, கடைசிச் சுதந்திரப் போரை நடத்துவதற்கு அஸ்திவாரமாகியிருக்கிறது. இதுவும் இறைவன் கருணைதான். இதே பூமியில் - இந்தப் புண்ணிய பூமியிலிருந்து நமது படைகள் தாய்நாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. ஆதலால்தான், சென்ற வருடச் சபதம் ஓரளவு வெற்றியளித்திருப்பதையுணரும் சுதந்திர இந்திய ராணுவம், அந்த மாபெரும் தேசாபிமானி - ஒப்பற்ற தலைவரின் ஆத்மாவுக்கு மகிழ்ச்சி தெரிவித்து மரியாதை செய்யவும், வெறுக்கத் தகுந்த பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியப் புண்ணிய பூமியை விடுவிப்பதுவரை ஆற்றலைத் தரும்படி வேண்டவுமே, மீண்டும் இங்கு கூடியிருக்கிறது.
1857-ஆம் வருட நிகழ்ச்சிகளைப் பற்றி சில வார்த்தைகள் சொல்வது பொருந்துமென்றே நினைக்கிறேன்.1857-ஆம் வருடப் போரை, பிரிட்டிஷ் ஊழியத்திலிருந்த இந்தியச் சிப்பாய்களின் கலகமென்று, ஆங்கிலேய சரித்திரக்காரர்கள் அபாண்டமாகத் திரித்துக் கூறிவிட்டனர். உண்மையென்ன வென்றால், இந்தியச் சிப்பாய்களும் இந்தியப் பொது மக்களும் ஒன்று சேர்ந்து நடத்திய ஓர் தேசீயப் புரட்சியே யாகும். இந்தியச் சிற்றரசர்கள் பலர் அந்தப் புரட்சிப் போரில் பங்கு கொண்டிருந்தனர். சில சிற்றரசர்கள் அதில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கி நின்றது துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த யுத்த ஆரம்பத்தில் நமக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. இறுதியில் எதிரிகளின் பலம் அதிக சக்தி பெற்றிருந்ததால் தோல்வியுற்றோம். புரட்சிச் சரித்திரத்தில் இந்தத் தோல்வி நடக்கக் கூடாததன்று. முதல் போரிலேயே வெற்றியடைந்துள்ள தேசம் ஏதேனும் உண்டாவென்பதை, உலகச் சரித்திரத்திலேயே காண்பது மிக அபூர்வம். சுதந்திரப் போர் என்பது ஒருமுறை உதித்துவிட்டால், அது தலைமுறை தலைமுறையாக இடைவிடாது ஒளிர்ந்து கொண்டேதானிருக்கும். புரட்சியுங்கூட தோல்வியுறலாம். நசுக்கப்படலாம்; ஆனால் தற்காலிகமாகவேதான்