உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நேதாஜியின் வீர உரைகள்

|| 155

முதற்கட்டம் சிறப்பாக முடிந்தது. இரண்டாவது கட்டத்தில் எதிரியின் எதிர் நடவடிக்கை ஆரம்ப மாயிற்று. நமது ஆட்களால் அதை எதிர்த்து நிற்கமுடிய வில்லை. ஆகவே விரிவான தேசீயப் போர் முனைகளும், கொண்டு செலுத்த திறமை மிகுந்த புரட்சி தளபதியும் தேவையாயின. அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் சில பகுதிகளிலுள்ள சிற்றரசர்கள், புரட்சியில் கவலையற்றவர் களாய் ஒதுங்கி நின்றனர். இவர்களது நிலைமைகண்டு மனம் தாங்காமல் மன்னர் பகதூர்ஷா, ஜெயப்பூர் - ஜோதிபுரி- பிக்கானீர் – ஆள்வார் போன்ற பல சிற்றரசர்களுக்கும் விடுத்த கடித்ததைப் பாருங்கள்:

"எந்தக் காரணத்தைக் கொண்டேனும் எந்த வழியிலேனும் ஆங்கிலேயர்களை நம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வெளியே துரத்தியாக வேண்டுமென்பதுதான் எனது மனப்பூர்வமான ஆசை. ஹிந்துஸ்தானம் முழுதும் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பது என் பேரவா. அதற்காகவே நடந்து கொண்டிருக்கும் இந்தப் புரட்சிப் போர் வெற்றிமுடி தரிக்க வேண்டுமானால், இந்த இயக்கத்தின் முழுப் பொறுப்பையும் தானே தாங்கிக் கொள்வதோடு, தேசத்தின் எல்லா சக்திகளையும் ஒருங்கு திரட்டி இந்திய மகாஜனங்கள் அனைவரையும் தன்பால் அணைத்துக்கொண்டு, வழி நடத்திச் செல்லும் ஆற்றல் படைத்த ஓர் தலைவர் வேண்டும். அவ்வளவு நிர்வாகத் திறமைகொண்ட தலைமை கிடைக்காவிட்டால் வெற்றி முடி தரிக்க முடியாது போய்விடும். ஆங்கிலேயர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு, அகில இந்தியாவையும் கட்டியாள நான் விரும்பவில்லை. மன்னர்களே! எதிரியை வெளியே துரத்தும்பொருட்டு, உறையிலிருக்கும் உங்கள் வாட்களை உருவ முன் வருவீர்களாயின், எனது ஏகாதிபத்திய உரிமைகளையெல்லாம் துறந்து விடுவதோடு, உங்களால் தேர்ந்தெடுக்கப்பெறும் எந்த இந்திய மன்னரிடமும் எனது அதிகாரத்தை, பதவியை ஒப்படைத்து விடுகிறேன்.”

பகதூர் ஷாவின் சொந்தக் கையால் எழுதப்பட்ட இக்கடிதம், எவ்வளவு தியாக சிந்தையையும் தலைசிறந்த தேச பக்தியையும் கொண்டிருக்கிறதென்பதை உணருகின்ற எந்த இந்தியன் தான், விடுதலை வேட்கை கொண்ட எவன்தான்,