உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 199

உதவினால், படையெடுப்புச் செலவுக்காக ஐந்து இலட்சம் வெள்ளி தருவதாகவும், அத்துடன் ஆண்டுதோறும் திறையாக இரண்டு இலட்சம் அனுப்பிவர இணங்குவதாகவும் அவன் தெரிவித்து மறைவாகக் கடிதம் வரைந்தான்.

சூதறியாத ஹைதர், இச்சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லச் சிக்கினான். சந்தர்ப்பங்கள் இங்கே அவன் எதிரிக்குப் படிப்படியாகச் சாதகமாகி வந்தன.

தன் ஆற்றல் எதுவுமில்லாமல், ஆர்க்காட்டுக்கு நவாபாக, இச்சமயம் வாலாஜா-சுராஜ் உத்தௌலா - முகமதலி விளங்கினான். சூழ்ச்சியால் பெற்ற அரசை அவன் சூழ்ச்சியாலேயே பேண எண்ணினான். ஆகவே, பிரஞ்சுக்காரரைப் பற்றி ஓயாத கோள் மூட்டி, ஆங்கிலேயரை அவர்கள் மீது ஏவிவிட்டான். ஆங்கிலேயப் படைகளும் அவன் ஆணைப்படி புதுச்சேரியை முற்றுகையிட்டன. ஆங்கிலேயர் வீரத்தைவிட ஹைதரின் வீரத்துக்கே இதுவரை பிரஞ்சுக்காரர் அஞ்சியிருந்தனர். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் ஹைதர் உதவியை நாடினர். தமக்கு ஆதரவு தந்தால், அதற்கு மாறாக, செஞ்சியையும் தியாக நகரையும் மைசூருக்கு அளிப்பதாக வாக்களித்தனர்.

ஹைதர் தன் படைகளின் பெரும்பகுதியை சையத் மக்தூம், அசூத்கான், மகூரிநாயுடு ஆகிய படை முதல்வர்களின் தலைமையில் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தான். மக்தூம்கான் பார்மால் வட்டம் - அதாவது தென் ஆர்க்காட்டின் ஒரு பகுதியை வென்று, அதை அசூத்கானின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் புதுச்சேரி சென்றான். முற்றுகை வளையம் கடந்து, கோட்டைக் காவல் வீரருக்கு அவன் உதவியும் ஊக்கமும் அளித்தான். ஆனால், முற்றுகை தகர்ந்துவிடவில்லை. மைசூர் வீரரே கோட்டையைக் காத்து வந்தனர்.

புதுச்சேரி நடவடிக்கை காரணமாக, ஹைதரிடம் இப்போது ஒன்றிரண்டு படைப் பிரிவுகளே இருந்தன. ஆயினும், குந்திராவின் போக்குகளில் சிறிது ஐயத்துக்கு இடமிருப்பதாக ஹைதர் காணத் தொடங்கியதிலிருந்து, அவன் தன் குடும்பத்தினரைப் பாதுகாக்க ஒரு ‘படைகாவல் அரண்' அமைத்துக் கொண்டிருந்தான். சின்னாட்களுக்குள் குந்திராவின் பகமை வெளிப்படையாயிற்று. அவன் வேண்டுகோளுக்கிணங்கி,