உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234 ||

அப்பாத்துரையம் - 6



பகுதிகளனைத்தையும் சித்தலதுருக்கத்தையும் பிடித்தடக்கினான். அஞ்சாநெஞ்சும் அடங்காப் பண்பும் கொண்ட சித்தலதுருக்கத்தின் வீரமறக்குடி மக்களை அவன் ‘சேலர்' என்ற பெயருடன் மைசூர்ப் படையின் தலைக்கூறாகச் சேர்த்துக் கொண்டான். அச்சிற்றரசின் தலைவனோ சீரங்கப்பட்டணத்தின் மீளாவெஞ் சிறையில் தன் மீந்த வாழ்நாளைப் போக்கினான்.