உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{block_center|



செம்மொழியின் செல்வரானார்

திக்கெல்லாம் தீந்தமிழின் புகழ்விளங்கச்
சூளுரைத்துச் செம்மொழியின் செல்வரானார
எக்கணமும் எந்தமிழின் மூச்சேயாகி
“தொண்டர்க்குத் தொண்டராய் அறிவுரைத்தார்
தென்னாட்டுப் போர்க்களங்கள்”என்னுமேட்டில்
வரலாறு வரைவதிலே புதுமை கண்டார்
தென்னகத்தின் பண்பையெலாம் வடித்தெடுத்துத்
தூய தமிழ் ஏடாகத் தீட்டி வைத்தார்.
ஆங்கிலத்தைத் தமிழாக்கி அவர்வகுத்த
அகராதி மொழிபெயர்ப்புத் துறையினிலே
பாங்காக நுழைகின்ற பைந்தமிழர்
அனைவருக்கும் உண்மையிலே கையகராதி
பலமொழிகள் உலவிவரும் பரதநாட்டில்
அறிஞர்களை ஆய்விக்கும் மொழிச் சிக்கல்
கலகங்கள் தீர்ப்பற்கு முன்னவர்
ஆங்கிலநூல் இயற்றிவைத்த தீர்க்கஞானி.
– இ. சு. முத்துசாமி
தமிழ்மண் பதிப்பகம்

2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி : 9444410654