உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70 ||

அப்பாத்துரையம் - 6



என்று கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். அவர் மூலம் ரோம் நகருடனும் பெர்லினுடனும் தொடர்வு கொள்ள முயன்றனர். ஆனால் எக்காரணத்தாலோ எதுவும் நடைபெறாமல் நாட்கள் கழிந்தன.

உத்தம் சந்தின் உத்தம சேவை

முன் கூறப்பட்ட ஒற்றன் சுபாஷ் போஸையும் அவர் தோழர் ரஹமத் கானையும் அடிக்கடி தொல்லைப்படுத்தினான். அச்சமயம் ரேடியோ விற்பனையாளரும் போஸிடம் பற்றுதலுள்ளவருமான உத்தம் சந்த் என்ற இந்தியர் அவருக்கு ஆதரவு தந்தார். 48 நாள்வரை நோயும் தொல்லையும்பட்டு அங்கே தங்கினார். அதன்பின் நடந்தே ரஷ்ய எல்லை செல்வதென்று அவர் துணிந்தார். ஆனால் இதற்குள் இத்தாலிய தூதரின் முயற்சியின் பயனாய் ஐரோப்பா செல்லவேண்டிய ஏற்பாடுகள் தயாராயின என்று செய்தி வந்தது. மார்ச் 17-இல் அவர் அங்கிருந்து புறப்பட்டு ஜெர்மனி வெளிநாட்டுக் காரியாலயத்தார் உதவியுடன் மாஸ்கோ சென்று அங்கிருந்து மார்ச் 28-இல் பெர்லின் சென்றார்.

இந்தியத் தலைவர் போஸும் ஜெர்மன் தலைவர் ஹிட்லரும்

சுபாஷ் ஆப்கானிஸ்தானிலிருக்கும்போது அவர் ஓர் இத்தாலியப் பெயருடன் இத்தாலியராக நடித்தார். இப்போது ஜெர்மனியில் மற்றொரு இத்தாலியப் பெயருடன் அங்குள்ள பல நாட்டுத் தலைவர்களையும் நேரில் கண்டு பேசலானார். அக்டோபர் மாதத்துக்குப் பின் இம்மறை பெயர்களிலிருந்து வெளிவந்து தம் பெயரை வெளிப்படையாகத் தெரிவித்தார். இதனுடன் ஐரோப்பாவெங்கும் அவர் ஜெர்மனியிலிருக்கும் செய்தி பரவிற்று. சில நாட்களில் அவர் முன்கூட்டித் திட்டம் செய்த படி அடால்ஃப் ஹிட்லரைச் சந்தித்தார். அவர்கள் சந்தித்துக் கைகுலுக்கிய காட்சியின் படம் மேனாடெங்கும் ஆர்வத்துடன் பரவிற்று. ஹிட்லர் அன்புடனும், நட்புரிமையுடனும் போஸை வரவேற்று வணக்கமளித்தார்.

போஸ் தம் ஐரோப்பாவிலுள்ள இந்தியர்களிடையேயும் போர்க் கைதிகளிடையேயும் பிரச்சாரம் செய்து இந்திய