86
உயர்தர
அறிவியலார்வமும்
அப்பாத்துரையம் - 7
முரண்பட்டவை
யல்ல,
கிட்டத்தட்ட ஒரே உணர்வின் இருவேற வண்ணங்களே. இதை
ஐன்ஸ்டீன் அழகுற விளக்கியுள்ளார். இதனையே,
'விண்ணொளிர் மீனின் வியன்ஒளி விளக்கம் தன்ணொளி மின்புழு அவாவிடும் ஆர்வம்'
('The desire of the moth for the star' – Wordsworth) என்று கவிதையார்வத்தால் சில கலையுலக மன்னரும் கண்டு கூறியுள்ளனர்.
போரை எதிர்த்து உலக அமைதியை நாடியவர் ஐன்ஸ்டீன். இக் குறிக்கோளுக்காக வீடு விட்டு நாடு விட்டுப் போராட அவர் தயங்கவில்லை. போர்க்கள வீரரின் மேம் பட்ட அமைதிக்கள வீரர் அவர். ஏனெனில் குறுகிய நாட்டுப்பற்று, இனப்பற்று இல்லாமலே, அவர் நாட்டுக்கும் இனத்துக்கும் தொண்டாற்றி னார். அதே சமயம் உலக இயக்கங்களிலும் பெரும்பங்கு கொண்டு, உலகத்துக்கும் தொண்டாற்றினார்.
ஐன்ஸ்டீன் வாழ்வின் பெரும்புதிர் அவர் எளிமைப் பண்பும் எளிமைத் தோற்றமுமேயாகும். இங்கே அவர் மகாத்மா காந்தியடிகள் போன்ற அருட்பெரியார்களுடன் ஒப்புரவுடையவ ராகிறார்.
அகத்துறவு பூண்ட அருளாளர்
புகழ் அவரை நாடிற்று. ஆனால், அவர் என்றும் புகழையோ, பதவியையோ நாடவில்லை. அறிவியலின் காதலனாக, ஆனால் அறிவியல் தரும் ஆற்றலை உலகுக்களித்துப் பணிவுடன் தொண்டு செய்யும் மனித இனத்தொண்டராக அவர் வாழ்ந்தார். குடும்பம், நட்பு, சமுதாய வாழ்வு ஆகிய பொதுவான இன்பங்களைக்கூட அவர் இந்த இரண்டு குறிக் கோள்களுக்காக விட்டுக்கொடுத்து அகத்துறவியாக வாழ்ந்தார்.
ஐன்ஸ்டீன் புகழ் பரந்த அளவுக்கு, அவர் கோட்பாடுகள் இன்னும் பொதுமக்களிடையே பரவவில்லை அறிவுலகின் உச்சியி லுள்ள ஒரு சிலரே அதனை மதிப்பிட்டு வரவேற்றனர். அவருடைய ‘தொடர்புறவுக் கோட்பாட்டைப் புரிந்து கொண்டவர் உலகிலே பத்துப்பேருக்குமேல் இருக்கமுடியாது'
ய