அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
(115
வரவேற்றனர். இது காரணமாக பிரான்சிலும் ஹாலந்திலும் ஐன்ஸ்டீன் செல்வாக்கு வளர்ந்தது. அறிஞர் பிளாங்கைப் போலவே, பழுத்த கிழவரான லாரென்ஸூம் தம் வாழ்நாள் இறுதிவரை ஐன்ஸ்டீனுடன் தம் ஆராய்ச்சிகள் பற்றிக் கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டிருந்தார்.
யூட்ரெக்ட்(Utreke) லெய்ட்ன் (Leyden) பல்கலைக்கழகங்கள் இப்போது ஐன்ஸ்டீனைத் தனித்தனி, தத்தம் பல்கலைக் கழகப் பேராசிரியராக வருமாறு அழைத்தன. திடுமென ஜூரிச்சை விட்டுச் செல்லத் துணியாமல் ஐன்ஸ்டீன் அவற்றை நன்றியறிதலுடன் மறுத்தார்.
பிரேக் பல்கலைக் கழக அழைப்பு
மூன்று ஆண்டு ஜூரிச்சின் சிறப்புரிமைப் பேராசிரியராயிருந்தபின் 1911-ல் பிரேக் நகர்ப் பல்கலைக் கழகம்Cenivessiny of pragar) அவருக்குப் பேராசிரியர் பணி தர விரும்பிற்று.இங்கே பேராசிரியர் பணி சிறப்புரிமைப் பணியன்று. நிறையுரிமைப் பணியே.(Post of Professor ordurery)அதன் எதியமும் முழுநிறை ஊதியமாய் இருந்தது. தவிர முதன் முதல் இப் பல்கலைக் கழகத்தில் வேந்தராயிருந்தவர், ஏர்ன்ஸ்ட் மாக்5 என்ற பேர்போன அறிவியல் அறிஞர். ஐன்ஸ்டீன் அவரையே தம் ஆராய்ச்சிக்குரிய மூல ஆசான்களுள் ஒருவராக மதித்திருந்தார். அத்தகைய பெரியார் பெயருடன் தொடர்புகொண்ட பல்கலைக் கழகத்தில் உழைப்பதை அவர் ஒரு பெரும்பேறு எனக் கொண்டார். இக் காரணங்களால், பிரேக் பதவியை ஏற்று அவர் அந்நகர் சென்றார்.
ஐன்ஸ்டீனுக்குப் பிரேகின் அழைப்பு விடுத்தவர் அப் பல்கலைக் கழகத்தின் இயங்கியல் துறைப் பொறுப்பாளர் ஆண்டன் லம்பா6 ஆவர். அழைப்புக்கு முன் அவர் அத்துறையில் உலகின் தலைசிறந்த வல்லுநரான மாக்ஸ் பிளாங்கிடம் ஐன்ஸ்டீன் பற்றிய கருத்துரை உசாவினார். கருத்துரை புகழுரையாக வந்துசேர்ந்தது. "ஐன்ஸ்டீன் புதிய கோட்பாடு வெற்றிபெறும் என்றுதான் நான் நம்புகிறேன். அது வெற்றி பெற்றபின் அவருக்கு யாரும் நற்சான்று கொடுக்கும் நிலையிலிருக்க மாட்டார்கள்.அவர் 20-ம் நூற்றாண்டின் கொப்பர்னிக்கஸாக" விளங்குவார்” என்று அவர் விடையிறுத்தார்.