உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்

123

பட்டது. இதிலும், இதனையடுத்த பல உலகப் பேரவைகளிலும் ஐன்ஸ்டீன் பங்கு தலைமைப் பங்காகவே இருந்தது. ஐன்ஸ்டீனின் புத்தாராய்ச்சிகளை மட்டுமல்லாமல், அதை அவர் எவருக்கும் விளங்கும்படி விரித்துரைக்கும் திறத்தையும், வினாக்களுக்கு விடை விளக்கம் கூறுகையில் அவர் காட்டிய பரந்த அறிவையும் கண்டு உலக அறிவியலறிஞர்கள் வியப்படைந்தனர்! அங்கு வந்திருந்த அறிஞர்கள் அத்தனை பேரிலும் வயதிலும் நீடித்த ஆராய்ச்சி அனுபவத்திலும் ஐன்ஸ்டீனே மிகவும் குறைந்தவர். ஆயினும் அவரையே யாவரும் தேர்ந்தெடுக்காத தலைவராக மதிக்கத் தொடங்கினர்.

1913-ல் வீயன்னா நகரில் ஜெர்மன் இயங்கியலறிஞர்கள் பேரவை ஒன்று கூடிற்று. ஈர்ப்பாற்றல் பற்றிய தம் புதிய கோட் பாடுகளை விளக்கும்படி ஐன்ஸ்டீன் அழைக்கப்பட்டிருந்தார். இங்கே அவர் தம் புது விளக்கங்களை விரித்துரைத்ததன்றி, தம் ஆராய்ச்சிக்கு உதவிய பல கணக்கியலறிஞர்களின் பெயர்களையும் எடுத்துக்கூறிப் பாராட்டினார். அவர்களில் சிலர் புகழ் பெறா தவர்கள். அவர்கள் அப் பேரவையில் வந்திருந்ததறிந்து, அவர் அவர்களை நடுவிடத்துக்கு இட்டுவந்து வெளிப்படையாகப் பாராட்டினார். அவர் அறிவுமட்டுமன்று, இதயமும் பெரிதே என்று அறிவியலுலகம் உணர்ந்து கொண்டது!

அவர் ஆன்மிக ஆசான்களுள் ஒருவராக ஏர்ன்ஸ்ட்மாக் இப்பேரவையில் வந்திருந்தார். அவருடன் ஐன்ஸ்டீன் அளவளா வினார். இளைஞர் ஐன்ஸ்டீன் அவருடன் நகைச்சுவைத் ததும்பப் பேசி வாதமிட்டார். ஆசான் கருத்துக்களில் சிலவற்றை ஐன்ஸ்டீன் ஏற்கவில்லையாயினும், முதுபெரும் பெரியாராகிய அவருக்கு மதிப்புக் காட்டும் முறையில் அவ்வாதத்தை நிறுத்தினார்.

பெர்லின் அழைப்பு

அந்நாளில் அறிவியல் உலகின் தலைமையிடமாகப் பெர்லின் நகரம் விளங்கிற்று. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் வில்லியம் அதன் புகழை வளர்ப்பதில் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்படைத்து வந்தார். அதன் இயங்கியல் அறிஞரான மாக்ஸ் பிளாங்க், போர்,3 ஆகியவர்கள் ஐன்ஸ்டீனையும் அங்கே கொண்டுசெல்ல அரும்பாடு பட்டனர். அத்துடன்

36