138
அப்பாத்துரையம் - 7
ஐன்ஸ்டீன் கோட்பாட்டை எளிய வடிவில் மக்களுக்கு விளக்கும் முயற்சிகளின் பெருக்கம்.
ஐன்ஸ்டீனின் தொடர்புறவுக் கோட்பாட்டில் ஈடுபட்ட பாரிஸிலுள்ள ஓர் அமெரிக்கச் செல்வர் அக்கோட்பாட்டை விளக்கும் சிறந்த சிறு நூலுக்கு 5000 அமெரிக்க வெள்ளி பரிசளிக்க முன்வந்தார். பரிசுநாடி எண்ணற்ற இளைஞர் சிறு நூல்கள் எழுதி அனுப்பினர்.
"என்னைத் தவிர என் நண்பர்கள் எல்லாரும் பரிசு பெற எண்ணுகின்றனர். ஆனால், எனக்கு அந்த ஆற்றல் உண்டு என்ற நம்பிக்கை எள்ளளவும் இல்லை,” என்று ஐன்ஸ்டீன் இது பற்றி நகையாடினார்.
இளைஞர் ஐன்ஸ்டீனைப் போலவே பதிவுரிமை நிலையத்தில் வேலை பார்த்த, ஆனால் 61 வயதுடைய ஒரு அயர்லாந்துக்காரர் அப்பரிசைப் பெற்றார்.
ஐன்ஸ்டீன் கொள்கைளை விளக்கும் திரைப்படங்கள் கூடப் பல இடங்களில் காட்டப்பட்டன.
ஐன்ஸ்டீன் கோபுரம்
இயைபியல் சரக்குகள் செய்த ஒரு பெரிய வாணிகக் கழகத்தின் ஆட்சியாளரான டாக்டர் பாஷ்30 என்பவர் ஐன்ஸ்டீன் கோபுரம் ஒன்று கட்டப் பெருந்தொகை அளித்தார். வான் கோளங்களின் கதிர்கள் தாம் கடந்து வரும் சூழ்களங்களுக்கேற்ப நிறம் மாறும் என்பது ஒளி பற்றிய ஐன்ஸ்டீன் கோட்பாடு. இதைத் தேர்ந்து காண் பதற்காகவே இக்கோபுரம் கட்டப்பட்டது. பாட்ஸ்டம்31 அருகே இது கட்டமைக்கப்பட்டது.
இயங்கியல் துறையில் புகழ்மன்னர்களாக விளங்கிய எல்லா ரையும் தாண்டிப் பல ஆண்டுகளாக ஐன்ஸ்டீன் புகழ் வளர்ந்து வந்தது. அதே சமயம் ஆண்டுதோறும் இயங்கியல் துறையில் சிறந்த அறிஞருக்கென்று நோபல் பரிசுகளும் வழங்கப்பட்டு வந்தன. ஐன்ஸ்டீன் பெயர் பரிசுக்குழுவின் கவனத்துக்கு வராதது பற்றி எங்கும் வியப்பு ஏற்பட்டது.ஆயினும் அதேசமயம் ஆண்டு தோறும் நோபல் பரிசுக் குழுவுக்கு இவ்வகையில் பெருத்த இக் கட்டும் ஏற்பட்டது.