அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
[141
இப்பண்புகளைக் காத்தே வந்தது. மற்ற ஜெர்மானியர்களுக்கும் ஐன்ஸ்டீனுக்கும் உள்ள வேற்றுமை யெல்லாம், அவர் மற்றவர்களைப் போல ஜெர்மனியின் ஆழ அகலப்பண்புகளை ஹிட்லரிசத்தின் காலடியிலிட்டு அழிக்க ஒருப்படவில்லை என்பதே.
ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடு புதிது. அவர் பின்பற்றிய முறையும் 20 ஆம் நூற்றாண்டுக்குப் புதிதே. ஏனெனில், அது அறிவியல் ஊழியில் பகுத்தறிவறிஞர் கைநெகிழ விட்டுவிட்ட மெய்யறிவுமுறை. ஆயினும் அவர் ஆராய்ச்சிகள் கால அடிப்படையற்றவையல்ல. 20 ஆம் நூற்றாண்டில் லாரென்ஸ், மைக்கேல்சன், மாக் ஆகிய பல அறிஞர்கள் அவர் முன்னோடிகளேயாவர். அவர்கள் அவர் அறிவியல் வளர்ச்சியின் வேர்கள் 20-ஆம் நூற்றாண்டு அதன் நிலம்- இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு இரண்டும் கடந்து எதிர்காலம் நோக்கி வளர்ந்த பாரிய படராலமரமே அவர் ஆராய்ச்சிகளின் தொகுதி.
மேலைநாட்டுப் பண்பாட்டின் புது நிலம் அமெரிக்கா. ஐன்ஸ்டீனின் வாழ்வைத் தன்னை நோக்கி ஈர்த்து, வளர்ச்சியைத் தனதாக்கியதன் மூலம், அது மேலைநாட்டு அறிவியலின் புத்தம் புதுநிலமாக வளரத் தொடங்கியுள்ளது என்னலாம். கொலம்பஸ் கண்ட புதுநிலத்தில் ‘அறிவியற் புதுநிலங்கண்ட கொலம்பஸ்' புது வாழ்வு கண்டது பொருத்தமுடையதேயாகும்.
பிரஞ்சு நாட்டு அமைச்சர் அழைப்பு
நோபல் பரிசு பெறுவதற்கு முன்னரே ஐன்ஸ்டீன் வெளிநாடு செல்லப் பயணம் புறப்பட்டிருந்தார். முதன் முதலில் அவர் ஏற்றுக் கொண்ட அழைப்பு பிரான்சினுடையது. அன்றிருந்த அரசியல் இயக்க எதிர் இயக்க அலை களிடையே, பிரான்சு, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே இந்தத் தொடர்பை வெறுத்த அரசியல் கட்சியினர் இருந்தனர். மக்களிடையே அமைதியின் பின்னும் போர்க்காலப் பகைமை தீரவில்லை என்பதை இது காட்டிற்று.
2
பிரஞ்சு அரசியலில் பால் பேய்ன்லெவீ என்ற ஒரு கணக்கியலறிஞரே அமைச்சர்களுள் ஒருவராயிருந்தார். அவர்