உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

அப்பாத்துரையம் - 7

1949-ஆம் ஆண்டி லேயே முழு உருவம் பெற்றது. தவிர, தனியியக்கம், அண்ட இயக்கம், ஒளி இயக்கம் ஆகிய துறைகளிலேயே இதுவரை அவர் தொடர்புறவுக் கோட்பாட்டை விளக்கி வந்திருந்தார். அணுவினுள் அதன் இயக்கத் ஆராயவும், அதன் மூலம் அணுவின் ஆக்க இயல் புணரவும் இப்போது அவர் உழைக்கத் தொடங்கினார்.

ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டம்

இவ்வராய்ச்சிகளுக்கிடையில் ஐன்ஸ்டீன் 1929 மார்ச்சில் தம் ஐம்பதாவது பிறந்தநாளை எட்டினார். இதை ஒரு பெரிய உலக விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று பல நாட்டின் அறிஞர்களும் நிலையத்தார்களும் அரசியலாளர்களும் திட்டமிட்டிருந்தனர். இத்தகைய ஆரவாரங்களை ஐன்ஸ்டீன் மனமார வெறுத்தார் - அவற்றைக் கண்டு அவர் அஞ்சினார் என்றே கூறவேண்டும். அவற்றிலிருந்து தப்புவதற்காக அவர் இனியதோர் சூழ்ச்சி செய்தார். பிறந்த நாள் வருவதற்குப் பலநாளைக்கு முன்பே அவர் பெர்லின் நகருக்கருகிலுள்ள ஒரு வணிக நண்பரின் தோட்ட வீட்டுக்கு எவரும் அறியாமல் குடிபுகுந்தார்.

ஐன்ஸ்டீனின் முகவரி யாருக்கும் கிடைக்கவில்லை. "பிரான்சுக்குச் சென்றிருக்கிறார். அமரிக்காவுக்குச் சென்றுள்ளார்,” என்ற வதந்திகள் எங்கும் எழுந்தன. தெளிவான முகவரியில்லாததால் எவரும் அவரைப் பார்க்க முடியவில்லை. அஞ்சல்கள் மட்டும் வீட்டில் மலைமலையாக வந்து குவிந்து கிடந்தன.

விழாநாள் கழித்து ஒன்றிரண்டு நாட்களில் ஐன்ஸ்டீன் வந்து அஞ்சல் மலைகளைக் கண்டு வியப்படைந்தார்.

வேலையில்லாப் படையின் தொண்டர் ஒருவர் அவருக்குப் புகையிலைச் சுருள் ஒன்று அனுப்பியிருந்தார். வேறு பல ஏழைக் குடியானவர்கள் அன்புரைகள் வழங்கியிருந்தனர்.இவை ஐன்ஸ்டீன் உள்ளத்தைக் கனிவித்தன. புகையிலைச் சுருள் அனுப்பிய அன்பருக்கு அவர் அன்புவிடை அனுப்பினார்.

அன்பு காட்டியவர், பாராட்டனுப்பியவர்கள் அரசர் முதல் ஆண்டி வரை இருந்தனர்.