அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
151
டு கட்டியிருந்தார். இது செய்யாமலிருந்தாலும், அவர் உடைமைகளுக்கு இந்த அழிவு ஏற்பட்டிராது.
நாட்டுப்பற்று,நகர்ப்பற்று ஆகிய இரு நற்பண்புகளுக்காகக் கூட ஐன்ஸ்டீன் தண்டனை பெறவேண்டியதாயிற்று!
ஜெர்மன் அறிவுக்கூடங்கள் அனைத்தும் ஐன்ஸ்டீன் எதிரிகள் கைவசப்பட்டன. அவர் பெயரோ, கோட்பாடோ, கல்விக்கூடங் களில் கற்பிக்கப்படக்கூடாதென்ற கட்டுப்பாடு சுமத்தப்பட்டது. அத்துடன் அவர் தொடர் பறிவுக்கோட்பாட்டு ஏடுகளும், அதனைக் குறிப்பிட்டபிற ஏடுகளும் அரசியல் நாடகக் கொட்டகையின் முன்னிலையில் வெளிப்படையாக
எரிக்கப்பட்டன.
பெல்ஜியம் தந்த பாதுகாப்பு
தம் நண்பர்களைப் பார்ப்பதற்காகவாவது ஐன்ஸ்டீன் ஜெர்மனிக்குப்போக க எண்ணியிருக்கக்கூடும். ஆனால், நண்பர்களே அவரை எச்சரித்தனர். ஜெர்மனிக்கு வருவது ஆபத்தானது. வந்தால் காவலோ, சிறையோ, கொலைத் தண்டனையோ கூட நேரக்கூடும் என்று பலர் தெரிவித்தனர். பெல்ஜியத்திலிருப்பதுகூட ஆபத்தானது என்று பலர் எண்ணினர். பிற்போக்குக் கும்பலைச் சார்ந்த எவரேனும் எல்லை கடந்து வந்து தீங்கு விளைவிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவிற்று. இவ்வச்சம் எப்படியோ பெல்ஜிய மக்களிடையே பரவி அந்நாட்டின் அரசியலாருக்கும் எட்டிற்று. ஐன்ஸ்டீனிடம் பற்றுதல்கொண்ட கத்தோலிக்கக் குருவான அப்போ லோ மயீத்தர்" என்பவர் பாதுகாப்பு நடவடிக்கைக்கான முயற்சிகள் செய்தார். பெல்ஜியம் அரசியாரும் ஐன்ஸ்டீனிடம் ஈடுபாடுகொண்டு, அவருக்கு இரண்டு சிறந்த படைவீரரை முழுநேரமெய்காவலராக ஏற்பாடு செய்தார்.
இச்சமயம் ஐன்ஸ்டீனைத் தேடிக்கொண்டு பேராசிரியர் பிராங்க் பெல்ஜியம் வந்தார். ஐன்ஸ்டீன் இருப்பிடத்தை விசாரித்து அவரைக் காணமுடியாமல் அல்லலுற்றார். எப்படியோ இடம் கண்டு அணுகிய பின்னும், மெய்காவலரால் அவர் கைதுசெய்யப் பட்டார். நல்ல காலமாகத் திருமதி ஐன்ஸ்டீன் அச்சமயம் வந்து அவரை விடுவித்தார்.