அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
[171
அறிவியலுலகின் மலைப்புக்குரிய ஒரு புதிர் இங்ஙனம்
எளிதில் விடுவிக்கப்பட்டது.
ஐன்ஸ்டீன் மூளை: ஆய்வுக்கூடம் கடந்த ஓர் ஆய்வுக்கூடம்
ஐன்ஸ்டீன் அறிவியற் புரட்சிகளுக்கெல்லாம் அடிப்படை யான மற்றொரு புரட்சி உண்டு. புலனறிவிலிருந்தே பொது அறிவு ஏற்படுவதுபோல, காட்சியாராய்ச்சி களிலிருந்தும், தேர்வாராய்ச்சிகளிலிருந்துமே அறிவியலறிவு வளர்கிறது என்று அறிவியல் ஊ ளழி அறிஞர் கருதி வந்துள்ளனர். ஆனால், ஐன்ஸ்டீன் ஐம்புலன் கடந்த ஆறாம் புலனாகிய மனத்தையும், காட்சித்தேர்வு கடந்த அறிஞன் மூளைத் திறனையும் வலியுறுத்தினார். ஆய்வுகளும் அறிவியலுக்கு இன்றியமையாத தானாலும், அதனினும் அடிப்படையான முக்கியத்துவம் உடையது அறிஞன் மூளையேயாகும். இதை அவர் ஆராய்ச்சி வரலாறே காட்டுகிறது.
அவர் ஆராய்ச்சியின் முதற்பகுதி பிற ஆய்வுக்கள அறிஞரின் முடிவு. இறுதிப்படியும் அது. ஆனால், ஆராய்ச்சியின் உயிர்நிலை, இடையே அவர் மூளையின் செயலேயாகும்.
ஆய்வுக்களங் கடந்த ஆய்வுக்ளமாக அவர் மூளை செயலாற்றிற்று. அந்த மூளையையே அவர் தம் இறுதிப் பத்திரத்தால் பிற்கால ஆய்வுக்கள ஆராய்ச்சிக்கு விட்டுச் சென்றுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அறிவியல், சமயம், கலை
அறிவியல் அறிஞர்களின் அறிவார்வம் பற்றிய ஐன்ஸ்டீன் கருத்து, அறிவியல் துறைக்கே புதுமையானது. பணமும் புகழும் பல அறிவியலார் ஆராய்ச்சிகளின் பயனாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஆயினும் பணமும் புகழும் பல அறிஞர்களின் நோக்கமாய் அமையவில்லை. ஐன்ஸ்டீன் வாழ்வில் அவை எள்ளத்தனையும் இடம்பெறவில்லை. அறிவார்வமும் மெய்ம்மை யுணரும் ஆர்வமுமே அறிவியலாளரைத் தூண்டுகின்றன என்பதில் ஐயமில்லை. இந்த ஆர்வம் கவிஞர் ஆர்வத்தினின்றும், சமய ஆர்வலரின் சமய உணர் வினின்றும் வேறானதல்ல என்று