உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஜேன் அயர்

(209

"தார்ன்ஹில் இல்லமா? நீ யார்? உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்?" என்று அவர் சீற்றத்துடன் குறுக்குக் கேள்வி கேட்டார். அவர் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அந்நிலையில் அவரை விட்டுச் செல்லவோ, அல்லது கேள்விக்கு விடை கூறாமல் நிற்கவோ வழியில்லை. ஆகவே, நான் “அங்கே வீட்டாசிரியை” என்றேன்.

66

"ஆ, அப்படியா! நான் மறந்துவிட்டேன்!" என்றார் அவர்.

அதன்பொருள் எனக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் தார்ன் ஹில்லுடன் அவருக்கு ஏதேனும் தொடர் பிருக்கக் கூடும் என்று உய்த்துணர்ந்து கொண்டேன்.

அவர் என்னைச் சற்று ஏற இறங்கப் பார்த்தார். “உன் உதவியை நாடத்தான் வேண்டியிருக்கிறது. சற்று அருகே வந்து நிற்கிறாயா." என்றார்.

அவர் குரலில் சிறிது மாறுதல் ஏற்பட்டதை நான் அப்போது கவனிக்கவில்லை. காலில் வலு இல்லாததால் உடலின் பளுவில் ஒரு பெரும்பகுதி என்மீது சாய்ந்தது. அதை நான் அரும்பாடுபட்டுத் தாங்கிக் கொண்டேன். அவர் குதிரையும் எழுந்து நின்றது. அவர் அதில் ஏறிக் கொண்டார்.

“உனக்குத் தந்த தொந்தரவை மன்னிக்கக் கோருகிறேன். இன்னும் ஓர் உதவி. என் கைத்தடி அதோ பாதையருகில் கிடக்கிறது. அதை எடுத்துக் கொடு" என்றார். கொடுத்தபின் அவர் "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார். நான் அஞ்சல் நிலையத்தக்குப் போவது அறிந்து, சரி நீ போகலாம்; உன் உதவிக்கு நன்றி, என்று கூறி விடை தந்தார்.

அவர் எதிர்த் திசையில் மெல்லக் குதிரைமீது சென்று மறையும் வரை பார்த்திருந்து நான் நகர் நோக்கிச் சென்றேன்.

அஞ்சல் நிலையத்துக்குச் சென்று என் வேலையை முடித்துக் கொண்டு நான் நகரில் நண்பகல் உணவு உண்டு, கடைத்தெருவும் பூங்காக்களும் சுற்றி உலவிப் பொழுது போக்கினேன். திரும்பத் தார்ன்ஹில் இல்லம் வரும்போது பொழுது சாயும் நேரமாகி விட்டது.

இல்லத்தின் வாயிலில் ஒரு வெள்ளை நாய் காத்திருந்தது. அஃது என்னைக் கண்டதும் குரைத்து வால் குழைத்தது.