உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. இடர்மேல் இடர்

ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் நாங்கள் திரு ராச்செஸ்டருடனே தேநீர் அருந்தினோம். அப்போது நான் அவரை நேரடியாகக் காணவும் அவர் போக்கையும் குணங்களையும் கவனிக்கவும் முடிந்தது. திருமதி ஃவேர்ஃவக்ஸ் அவர் சிறு சிறு போக்குகளையும் வழக்கங்களையும் என்னிடம் விரித்துரைத்திருந்தாள். இப்போது அவற்றின் உண்மை இயல்புகளை என்னால் அறியமுடிந்தது. அவர் இந்தச் சிறுவயதுக்குள்ளாகவே வாழ்க்கையின் இன்னல்களுக்குப் பெரிதும் ஆளானவர் என்பது நன்கு விளங்கிற்று. இவர் வெளிக்கு முரட்டுத்தனமாகப் பேசியதும் இதனாலேயே என்று உணர்ந்தேன். அவர் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் வாழ்க்கைமீது அவருக்கு ஏற்பட்ட வெறுப்பும் கசப்புமே வெளிவந்தன. அடேலுடன் பேசும்போது மட்டுமே இந்த வெறுப்புச் சற்றுக் குறைவாயிருந்தது. என்னிடம் தொடக் கத்தில் இந்த வெறுப்பை அவர் காட்டினாலும், படிப்படியாக அது குறைந்தே வந்தது. நான் அடேலின் நல்லாசிரியையாய்ச் செய்யும் பணியில் அவருக்கு இருந்த மதிப்பே இதற்குக் காரணம் என்று நான் நினைத்தேன்.

அவர் என்னை மதிக்குந்தோறும், எனக்கும் அவரிடம் மதிப்பு ஏற்பட்டது. வீட்டுத் தலைவர் என்ற முறையில் முதலில் அவருக்கு நான் காட்டிய தொலைமதிப்பு அவர் வாழ்வின் வரட்சிமீது இரக்கமாகவும், அன்பு மதிப்பாகவும் மாறிற்று. அவர் கருத்துகளுக்கு மற்றவர்களைப் போல் நான் வளைந்து கொடுப்பதில்லை. அவருக்கு இச்சகம் பேசி அவர் நட்பைப் பெற விரும்பவுமில்லை. என் கருத்துக்களை ஒளியாது அவரிடம் கூறினேன். கருத்து மாறுபாடுகளையும், விருப்பு வெறுப்புக் களையும் துணிவுடன் காட்டிக்கொண்டேன். அவர்