ஜேன் அயர்
(221
விருந்தின் போது திரு. ராச்செஸ்டரைப் பற்றி எண்ணா திருக்க என்னாலானமட்டும் முயன்றேன். ஆனால் அவர் தொலைவிலிருந்தாலும் என் எண்ணம் முழுவதும் அவர் திசையிலேயே இருந்தது.எப்படியும் அவ்விடத்தில் இருந்து அவர் பற்றிய சிந்தனைகளை வளர்க்காமல் நழுவிப் போய்விட நான் வழி தேடிக் கொண்டிருந்தேன். செல்வி பிளான்சி இசை மேளத்தைக் கையாடிய வண்ணம் திரு. ராச்செஸ்டரைப் பாட அழைத்தபோது அத்தகைய தறுவாய் எனக்குக் கிடைத்தது. ஆனால் என்னால் அதைப் பயன்படுத்திக் பயன்படுத்திக் கொள்ள
முடியவில்லை. அவர் பாடியதை இதுவரை நான் கேட்டது கிடையாது. அதைக் கேட்கும் ஆர்வம் என்னைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், அவர் நெடுநேரம் பாடவில்லை. அதை நிறுத்திவிட்டு அவர் வெளியேறினார். இப்போதாவது சென்று விடலாமென்று கருதி நான் அருகிலிருந்த கதவு வழியாக வெளியேறிக் கூடத்தைக் கடந்தேன்.
ம
திரு. ராச்செஸ்டரைவிட்டுச் செல்லவே நான் வெளி யேறினேன். ஆனால், கூட்டத்தில் அவரே எனக்கெதிராக வந்தார். செல்வி பிளான்சி தோழமை இருக்கும்போது ப்போது அவர் என்னுடன் மிகுதி நேரம்பேசமாட்டார் என்றும், விரைந்து அவளிடமே செல்லத் துடிப்பார் என்றும் நான் எதிர்பார்த்திருந்தேன். அதற்குமாறாக அவர் என்னுடன் ஆர அமர நின்று பேசினார்.
"நீ ஏன் முன்போல என் அறைக்கு இப்போது வருவதில்லை?' என்று அவர் கேட்டார்.
ந
நான் இதற்கு மறுமொழி கூறவில்லை. அதே கேள்வியை என் மனம் உள்ளூரத் திருப்பிக் கேட்டுக் கொண்டது. “நீ ஏன் தேநீர் அருந்தும் போது கூட விருந்தினர்களுடன் சரிநிகராக வந்து பழகாமலிருக்கிறாய்?" என்று மீண்டும் கேட்டார்.
இதற்கும் என்னால் மறுமொழி கூற முடியவில்லை. ஆனால், அவர் விருந்தினரை உயர்வாகவும் என்னை வேறு வகையாகவும் நினைக்கவில்லை என்பது இப்போது எனக்குத் தெள்ளத் தெளிய விளங்கிற்று. ஆனால், ஒரு விட்டாசிரியைக்கு அவ்வாறு பழகும் உரிமை கிடையாது என்பதை நான் நன்கு அறிவேன்.