230
அப்பாத்துரையம் – 7
"சரி, அப்படியானால் நீங்கள் இன்னும் எனக்கு ஐம்பது பொன் தரவேண்டும்!”
"அதைத் திரும்பி வந்தால்தான் பெறலாம். அஃது என்னிடமே இருக்கட்டும்!”
66
அவர் போக இருந்தார். நான் திரும்பவும் அழைத்து எனக்கு இன்னும் ஒரு செய்தி பேச வேண்டியிருக்கிறது,” என்றேன்.
66
'அவ்வளவு முக்கியமா? அது என்ன?”
"நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்!” ‘ஆம். அதனாலென்ன!”
66
"அடேல் இனிப் பள்ளிக்கூடம் செல்லவேண்டி வரலாம். ஆகவே, நான் வேறு எங்காவது வேலை பார்க்கவேண்டும்."
ஒரு சில நொடிகள் அவர் என்னை ஏறிட்டுப் பார்த்து விட்டு, "உன் வேலை வகையில் நீ முயற்சி எதுவும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அந்தப் பொறுப்பு முழுவதையும் என்னிடமே விட்டு விடும்படி கோருகிறேன்.”
'அப்படியானால் மகிழ்ச்சியே!'
"நீ நாளையா புறப்படுகிறாய்?" ‘ஆம்’
'சரி, போய்வா, பார்ப்போம்!'
திரு. ராச்செஸ்டரின் இளமைக் காலத்தின் முற்பகுதி பல இன்னல்களுக்கு இடமாய் இருந்திருக்க வேண்டும் என்பதை நான் எண்ணிக் கொண்டே சென்றேன். ஆனால், கேட்ஸ் ஹெட்டை அணுகுந் தோறும் என் இளமையின் முற்பகுதியும் அதைவிட உயர்ந்ததன்று என்பது நினைவுக்கு வந்தது.
ராச்செஸ்டர் வீட்டு வாழ்வில் அன்பு இல்லை. கேட்ஸ் ஹெட்டில் என் தொடக்க வாழ்வில் அதன் நிழல் கூடக் கிடையாது. அந்த அளவு இரண்டிலும் ஒற்றுமையே.