ஜேன் அயர்
237
மறக்க முடியாது. நீங்கள்தாம் மறந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்.”
வாசகம் என் வாயிலிருந்து நழுவிய பின்தான் என் தவற்றை உணர்ந்தேன்; விரலைக் கடித்துக் கொண்டேன்.
"அப்படியானால் என்னை விட்டு ஏன் போக வேண்டும்? இங்கேயே ஏன் இருக்கக்கூடாது?"
“உங்கள் மனைவி உங்கள் வீட்டுக்கு வருவாள். அடேலைப் பள்ளிக்கு அனுப்பிவிடவே அவள் விரும்பக்கூடும்."
‘நான் அனுப்பாது வைத்துக் கொள்கிறேன்.”
66
'அப்போதும் என்னால் இருக்க முடியாது. என் மனநிலை டங்கொடாது, என்றேன்.
""
நான் மீண்டும் விரலைக் கடித்துக் கொண்டேன்.
66
என்னையே திருமணம் செய்துகொண்டு நீ என் மனைவியானால்!”
நான் திடுகிட்டேன்; நான் விரும்பிய விருப்பம் ஈடேறு மென்பதை நான் என்றும் எதிர்பார்க்கவில்லை. அப்போதும் அவர் என்னிடம் துணிச்சலான கேலிப்பேச்சுப் பேசுவதாகவே எண்ணினேன்.
அவர் என் குறிப்பை அறிந்திருக்க வேண்டும். என் முன் மண்டியிட்டு நின்று, "ஜேன்! நான் விளையாட்டுக்காகப் பேசவில்லை. மனமார உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மணம் செய்து கொள்ளும் தகுதியும் வாய்ப்பும் எனக்கு இருந்தி ருந்தால், முன்பே வேறுவகையில் நடந்திருப்பேன். நம்மிடை யேயுள்ள வேலியைத் தாண்டுமுன், நீ தாண்ட விரும்புகிறாயா என்று அறியவே இவ்வளவு தகிடு தத்தம் செய்ய வேண்டிய தாயிற்று.இப்போது கேட்கிறேன். நீ என்னை மணந்து என் மனைவியாய் இருக்க விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
என்னால் இதை நம்புவதும் கடினமாயிருந்தது. ஏற்கத் துணிவது அதினினும் அரிதாகியிருந்தது. நான் பேசாது நின்றேன்.