உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 7.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

அப்பாத்துரையம் 7

முடியவில்லை. பொறுமையாக அவர் அவளிடமிருந்து தன்னை விடுவித்துக் ரெண்டார். அதற்குள் கிரேஸ்பூலும் மற்றவர்களும் அவளைக் கயிற்றால் ஒரு நாற்காலியுடன் சேர்த்துக் கட்டினார்கள்.

ராச்செஸ்டர் அவளைச் சுட்டிக் காட்டி, “இது தான் உங்கள் சட்டப்படி எனக்கு உரிய மனைவி. எனக்கு அவள் அளிக்கும் வரவேற்பையும், ஆதரவையும் கண்டீர்கள். சட்டப்படி அவளை நான் மனைவியாகக் கொண்டு வாழ வேண்டுமென்று கூறுகிறீர்கள்,” என்று வெப்பத்துடன் கேட்டார். பின் என்னைச் சுட்டிக் காட்டி, "இதோ நான் விரும்பி மணம் செய்ய இருந்த பெண்: என்னை விரும்பி எனக்கு ஆதரவு காட்டத்தக்கவள். உங்கள் சட்டப்படி இவள் தான் எனக்கு மனைவியாகத் தகாதவள். உங்கள் சட்டம் அளிக்கும் நேர்மை நான் இவளை இழந்து, அவளுடன் வாழவேண்டும் என்பது,” என்றார்.

அயலார் இருவரும் ராச்செஸ்டர் சொற்களின் உணர்ச்சியை ஒத்துக்கொண்டனர். “உங்களிடம் எங்களுக்கு ஒரு பகைமையும் கிடையாது. நாங்கள் எங்கள் கட்சிக்காரர் சொல்லியபடி செய்தோம். அவர் இதோ நீங்கள் மணம் செய்ய இருந்த பெண்ணின் பெரிய தந்தை. தன் திருமணத்தைப் பற்றி இவள் எழுதிய கடிதத்தை அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவர் நண்பரான திரு. மேஸன் உடனிருந்தார். அவர் மூலம் ராச்செஸ்டரின் பழைய திருமணச் செய்தி தெரிய வந்தது. தம் தம்பி புதல்வியின் நலங்கோரிய அவர் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிவந்தது,” என்றார்.

எனக்கு இப்போது நான் என் பெரிய தந்தைக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. நான் அதற்காக இப்போது வருந்தவில்லை. ஏனென்றால் ராச்செஸ்டரை நான் எவ்வளவு விரும்பினாலும், அவர் நிலைமைக்கு எத்தனை இரங்கினாலும், அவருக்காகச் சட்டம் மீறிய தொடர்பில் இறங்கவோ, என்னைப் பலியாக்கிக் கொள்ளவோ நான் விரும்பவில்லை.