38
அப்பாத்துரையம் – 7
உள்ளமும் திறமும் படைத்தவர்கள். லிவிங்ஸ்டனுக்கு வழிகாட்டியாக வந்தவன் இவ்வினத்தவனே. அவன், அவ்வப்போது அவர்களை விட்டகன்று திகைக்க வைத்தும் வந்தான். ஆயினும் சூதற்ற உள்ளத்துடனும் கவர்ச்சிமிக்க நடிப்புடனும் தற்பெருமை தோன்ற அவன், அவர்கள் முன் நடந்து சென்று ஆரவாரம் செய்வான். எனவே அவனை யாரும் சினந்து கொள்வதில்லை. அங்கங்கே புதர்மக்களின் மாதர் அவர்களைக் கண்டு ஓடுவர். பிறகு அவர்கள் தண்ணீர் மட்டுமே கேட்பது கண்டு வேளாண்மையுடன் நன்கு உபசரிப்பர். லிவிங்ஸ்டன் தந்த உணவுப் பொருள்கள், பரிசுகள் அகியவற்றைக் கண்டு அவர் மகிழ்ந்து கூத்தாடினர்.
உதவி மறுப்பு
26
என்ற
சிறிது தூரம் சென்றதும் “இதோ 'ஙாமி' ஏரி” என ஆஸ்வெல் துள்ளிக் கூத்தாடினார். ஆனால், அஃது உண்மை யில் நீரன்று, கானல் ஒளியே என்று கண்டு, அவர் ஏமாற்றம் அடைந்தனர். நெடுநாட் சென்றபின் ‘ஜுகா என்ற ஆற்றையும், அதன்பின் அதனினும் பெரிதான ‘தமனாக்கிள்'7 ஆற்றையும் கண்டார். தமனாக்கிள் கடந்தால் ஸெபிட்டு வேனைச் சந்திக்கலாம். ஆனால், அந்த ஆறு அகலமும் ஆழமும் உடையதாக இருந்தது. லிவிங்ஸ்டன் இக்கரையில் இரந்த தலைவனிடம் ஓடம் வேண்டினர்.ஸெபிட்டுவேனிடம் பொறாமை கொண்ட அத்தலைவன் உதவ மறுத்தனன். எனவே லிவிங்ஸ்டன், வேறு வகையின்றிப் புறப்பட்ட இடத்திற்கே மீள வேண்டி யிருந்தது. ஆஸ்வெல் தாம் நன்னம்பிக்கை முனை செல்வதாக வும் அங்கிருந்து நல்ல படகு அனுப்புவதாகவும் கூறிச் சென்றார்.
பாலைவன யாத்திரை-2
லிவிங்ஸ்டன் வாழ்க்கை நடத்திய இடத்தில் பஞ்சம் தொடர்ந்த நிலை பெற்றது, எனவே இவர் பள்ளி, பயிற்சிக் கூடம் யாவும் சீர்குலைந்தன, வேறு வேலையின்மையால் 1850 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் லிவிங்ஸ்டன் ஈடுபட்டார். இம்முறை காய்ச்சலால் வருந்திய அறுபது வெள்ளையரைக் காக்கும்பொருட்டு, லிவிங்ஸ்டன் அவர்களுக்கு நேர் வழிவிட்டு விலகிச் சிலநாள்