56
அப்பாத்துரையம் – 7
விற்க எண்ணிப் பம்பாய்க்குச் சென்றார். அங்கு விற்க முடியாது போகவே, மீண்டும் இங்கிலாந்து போய்ச் சேர்ந்தார். லிவிங்ஸ்டன் மறுமுறையும் பம்பாய்க்குச் சென்று அக்கப்பலை அழிவிலையாக (நஷ்டமாக)2600 பொன்னுக்கு விற்றார். ஆயின் அந்தோ! அப்பொருளும் இவருக்குக் கிட்டாமல், அப்பொருளை விட்டுவைத்த இந்தியப் பொருள் நிலையம் முடிவுற்றதாம்! இத்தனை தீமைகளிடையேயும் மனங் கலங்காது தம் பணியிலே உறுதி தவறாதிருந்த லிவிங்ஸ்டன் மன உரத்தின் தன்மையை என்னென்பது! 'மெய்த்திரு வந்துற்றபோதும் வெந்துயர்வந்துற்ற போதும், ஒத்திருக்கும் உள்ளத்து உரவோர்' என்ற பெரியார் இயல்பிற்கு இவர் ஓர் எடுத்துக் காட்டாயினர்.
அடிக்குறிப்புகள்
1.
Marseilles
2.
royal georaphical society
3. London Mission Society
4.
Lord Palmerston
5. Consul of east,
6.
Sir R. Murchison
7.
John Murray
8.
Oswell
9.
Dr. Kirk,
11. Gelogist
13. River Zambest
15. Marobert
17. Sheshake
19. Makomero
21. River Rovama
10. Botanist
12. R. Thorontn t. Seeoateon,
14. Kongone
16. Rivershire
18. Mangancha
20. Ajwo
22. Miss Mackensi