74
அப்பாத்துரையம் - 7
றிலும் உள்ளுரச் சந்தடியின்றி நடைமுறையில் காட்டப்படும் ஓர் அடிப்படைப் பண்பாகும். சமயத்தின் உயர்ந்த பண்பு களை அவர் வாழ்க்கை மறையில் காணலாம். அவர் வேலைக் காரரிடம் நடந்து கொள்ளும் முறையிலும் ஆஃப்ரிக நாட்டு மக்களிடம் நடந்துகொள்ளும் முறையிலும் தீவிர வைராக்கியமுடைய முஸ்லீம்களிடம் நடந்து கொள்ளும் நடைமுறையிலும் அவர் சமயத்தைச் சிறப்பாகக் காணலாம்” என்று கூறுகிறார்.
இவர் வரலாற்றுப் பயன்
லிவிங்ஸ்டன் போன்ற பெரியார் நம் தமிழ் நாட்டில் தோன்றி நம் நாட்டு வாழ்வு, சமய வாழ்வு பொதுவாழ்வு ஆகியவற்றுக்கு உயிர் கொடுத்து, அதன் பழம்புகழைப் புதுப்பிக்கவேண்டும். இவர் போன்றவர் வாழ்க்கைகள் இளைஞர் உள்ளத்தில் படிவதால், அத்தகைய பண்புகள் வளர்ந்து வாழ்கை பெருமை அடையும் என்பதில் ஐயமில்லை.
அடிக்குறிப்புகள்
1.
2.
A chip of the old block from my family. Epitaph