உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாத்திரிகன் நடந்த வழிதெரியும் உலகமதில-இனி நடக்கும் வழிதெரியா யாத்திரிகன் நான்! - நடந்த.. தொடர்ந்தது முடிந்திடும் தன்மை அறியா - விசைத் தொடர்பினில் இயங்கிடும் யந்திரம் போலே என்று முடிவுறுமோ எந்த ஊரிலோ ? - நல்ல இரவிலோ பகலிலோ எவ்விடத்திலோ? நடந்த ஒன்று மறிந்திடாமல் காலப் போக்கிலே - தினம் ஓய்வின்றிச் செல்லுகின்றேன் எவ்விடத்திற்கோ? - நடந்த. 118