உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குரங்கு மனமெனும் குரங்கு வாழ்விலே என்னை வாட்டி வதை புரியுதே! - தினம் பணமெனும் ஆசைப் பகட்டினைக் காட்டி பதவியாம் மோக வலையைமுன் நீட்டி குணங்கெட்டுப் பழிசெய் எண்ணத்தை மூட்டி கோதையர் நினைவிலே தினம்முழுக் காட்டி நம்பிக்கை மோசம் பண்ணிடச் செய்யும் நல்லோரின் உறவை வெறுத்திடச் சொல்லும் வம்பர்கள் சேர்க்கை வலிந்துமேற் கொள்ளும் மறுத்தாலும் கேளாமல் மமதையால் துள்ளும் துணிச்சலாய்த் தவறுகள் செய்திடச் சொல்லும் -LOGOT... ·LD GOT... LD 60T.... சுகத்திற்காய் களவையும் மேற்கொள்ளப் பண்ணும் தனிச்சுவை மதுவிலே இருப்பதாய் எண்ணும் தன்னலம் கொண்டுமே வாழ்ந்திடப் பண்ணும் - -LD6OT... 123