உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கதன் மீதொரு அழகிய மண்டபம் அறிவும் ஜீவனும் ஆர்த்தன கீதம் சங்கை விடுத்தே ஜகத்தை மறந்துநான் எழுந்தேன் குதித்தேன் ஏதெதோ செய்தேன் கங்குல் சூழ்ந்தஅக் கவின்பெரு இரவு விடியா திருக்க வேண்டுமென் றெண்ணினேன் மங்கலக் காட்சியை மாந்தினேன் மாந்தினேன் அப்படி மாந்தினேன் ஆகினு மென்ன? பொழுதோ புலர்ந்தது திரையும் விழுந்தது பொல்லாப் பொழுதே! நீஏன் விடிந்தாய்? பழுத்த மாதுளை முத்தொளிர் செம்மையைப் பழிக்கும் உதட்டினள் முழுமதி முகத்தாள் தழுவியென் உடல்மேல் சாய்ந்து கிடக்கத் தங்கத் தூண்மணி மண்டபம் மீது இழுத்துக் கட்டி இருக்கும் திரையை அகற்றிஅந் நாடகம் பார்க்கவா அல்லே! 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/53&oldid=1744198" இலிருந்து மீள்விக்கப்பட்டது