உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதக் கலசம் 1964.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி ! இயற்கையெனும் தேவியே நின் எழில்நடனம் கண்டேன் எனைமறந்தேன், ஆடுகின்றேன் ஆடுகின்ற துலகம்! உயர்வுகெடத் தேய்ந்துதேய்ந்து உருவமற்றுப் போவாய் ஒளிநிலவே பின்பிறையாய் உலகினிடை வருவாய்! 'முயற்சியினால் ஆகிடாது ஒன்றுமில்லை உலகில் முயன்றிடுக மானிடனே!' என்பதுன்றன் தோற்றம் உயர்ந்த உன்றன் வாழ்க்கையிலும் மாசுஉண்டு நிலவே உன்னையும் தான் விதிப்பாம்பு விடுவதில்லை அறிந்தேன்! இயற்கையெனும் தேவியே நின் எழில் நடனம் கண்டேன் எனைமறந்தே ஆடுகின்றேன் ஆடுகின்ற துலகம் ! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதக்_கலசம்_1964.pdf/8&oldid=1744145" இலிருந்து மீள்விக்கப்பட்டது