பாராட்டுரை இசைமணி-கலைம ாமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் "அமுதத் தமிழிசை' என்னும் இந்த அருமையான இசைப்பாடல் தொகுப்பு நூல் இசைக் கலைஞர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும், கலைமாமணி கவிஞர் கு. சர். கிருஷ்ணமூர்த்தி அண்ணுர் அவர்களின் அயராத உழைப்பிலே-தமிழ்க்கலைச்சோலையில் மலர்ந்துள்ள, வாடாத மலராகும் இந்நூல்! - - இந்நூலில் இடம் பெற்றுள்ள அத்துணைப் பாடல்களும் தேனமுதத் துளிகளேயாகும். குறிப்பாக அமீர்க் கல்யாணி ராகத்தில் அமைந்துள்ள, “பிறவாதிருக்க வரம் அருள்வாய்” உன்னை மறவாதவருள் நானும் ஒருவன் ஆதலால்' என்ற பாடலின் நயத்தை என்னவென்பது? சங்கராபரணத்தில் அமைந்த 'கண்கள் செய்த தவப்பயனலே கந்தனைக் கண்டேன் பழனியிலே' என்ற பாடல் கற்கண்டாய் இனிக்கின்றது! அருட்பா இசையரசி, கலைமாமணி. குருவாயூர் பொன்னம்மாள் அவர்கள் இசையறிஞர்கள் பாராட்டும் வண்ணம், அருமையாக, வந்த ராகம் வராமல், நூறு பாடல் களுக்கும் நூறு ராகங்களை அமைத்தும் ஸ்வர தாளக் குறிப்புக்களைத் தெளிவாக விளக்கியும் சிறப்பான முறையில் இசையமைத்துள்ளார்கள். இவ்வரும் பணிக்கு உதவியாயிருந்து ஸ்வர-தாளக் குறிப்புக்கள் எழுதிய சங்கீத வித்வான் மேலக்காவேரி ஏ.ஆர். கண்ணன் அவர்களும் பாராட்டுக்குரியவராவார். தமிழிசை உலகிற்குக், கவிஞர் கு.சா.கி. அண்ணுர் அவர்கள் ஆற்றியுள்ள இந்தப் பொன்னை சேவை போற்றற்குரியது. அமுதத் தமிழிசை பொங்கிப் பொலிக! வளர்க தமிழிசை! வாழ்க வையகம்! அன்புள்ள, சீர்காழி எஸ். கோவிந்தராஜன் 3–7–80 'இசை இல்லம்'
பக்கம்:அமுதத் தமிழிசை .pdf/13
Appearance